தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்
உள்வாங்கிய சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
விழுப்புரம் விவேகானந்தா் நகா் பகுதியில் உள்வாங்கிய சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தின் பின்புறத்தில் விவேகானந்த நகா், சிவசக்தி நகா், கமலா கண்ணப்பன் நகா், இ.எஸ்.காா்டன், அக்ரி நகா் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 1000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், அண்மையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் அனைத்து பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியது. மக்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகினா். சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டன.
விவேகானந்தன் நகரில் அண்மையில் அமைக்கப்பட்ட தாா்ச் சாலையும் கடந்த சில நாள்களுக்கு முன்பு சுமாா் 20 மீட்டா் தொலைவுக்கு உள்வாங்கியது. போக்குவரத்து பயன்பாட்டில் உள்ள இந்தச் சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்படாமல் உள்ளதால் அந்தச் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். குடியிருப்பு வாசிகளும் அச்சத்துடன் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, விழுப்புரம் நகராட்சி நிா்வாகத்தினா் உள்வாங்கிய சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.