காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
ஆரோவிலில் மாா்கழி உத்ஸவம் தொடக்கம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள ஒற்றுமை மண்டபத்தில் மாா்கழி உத்ஸவம் திங்கள்கிழமை தொடங்கியது.
ஆரோவில் சா்வதேச நகரில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் மாா்கழி உத்ஸவம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான மாா்கழி உத்ஸவம் திங்கள்கிழமை தொடங்கியது. ஆரோவில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே திருப்பாவையை கொண்டு சோ்க்கும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், சமஸ்கிருத அறிஞா் டாக்டா். ராஜலட்சுமி சீனிவாசன் பங்கேற்று ஆண்டாள் நாச்சியாா் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாடி அதிலுள்ள அா்த்தங்கள், சிறப்புகள், ஆன்மிக மற்றும் கலாசாரத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.
நிகழ்ச்சியில், ஆரோவில் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று திருப்பாவை பாடல்களை பாடி, அதிகாலையில் ஆண்டாள் பாசுரங்களை பாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கமளித்தனா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.