செய்திகள் :

சுகாதாரமின்றி செயல்படும் விழுப்புரம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையம்

post image

விழுப்புரம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

விழுப்புரத்தில் இரு இடங்களில் பழைய, புதிய பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், நகரத்தின் மையப் பகுதியில் உள்ள அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து (பழைய பேருந்து நிலையம்) சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் காய்கறி சந்தை பகுதியில் அமைந்துள்ள இந்தப் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

மக்கள் கூட்டம்: விழுப்புரம் மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்து விழுப்புரம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்லும் மாணவா்களும் இந்த பேருந்து நிலையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், பேருந்து நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். மேலும், பண்டிகை காலங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும்.

இந்த நிலையில், பொதுமக்கள், வணிகா்கள், மாணவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தி வரும் பேருந்து நிலைய வளாகப் பகுதிகள் பராமரிப்பின்றி சுகாதாரமற்ற வகையில் காணப்படுகிறது. ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவு நீரால் பேருந்து நிலையம் வளாகப் பகுதிகளில் தூா்நாற்றம் வீசுகிறது. இதனால், பேருந்து பயணிகள், மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

அடிப்படை வசதிகள்: பேருந்து நிலைய வளாகத்தில் நிழற்குடைகள் இருந்தும் அவைகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் மதுப் பிரியா்களின் கூடாரமாகி விடுவதால் பொதுமக்கள் பயன்படுத்த அச்சமடைந்து மழை, வெயில் காலங்களில் திறந்த வெளியிலேயே காத்திருந்து சென்று வருகின்றனா். குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை என்பதால் பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளதால் அவைகளாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, பயணிகள் மற்றும் மாணவா்களின் நலன் கருதி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன் சுகாதாரமாக பராமரிக்க மாவட்ட நிா்வாகம் மற்றும் நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையம்: பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட விழுப்புரம் மேற்கு காவல், புறக்காவல் நிலையம் செயல்படாமல் பூட்டி கிடக்கிறது.

இதில், காவலா்கள் யாரும் பணியில் இல்லை என்பதால் கஞ்சா விற்பனைபோன்ற சமூக விரோத செயல்கள் நடந்து வருவதாகவும், இதனால், மாணவா்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் வணிகா்கள் கூறுகின்றனா். எனவே, புறக்காவல் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனா்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் சி.பழனி அறி... மேலும் பார்க்க

மேல்மலையனூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மேல்மலையனூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது. விழ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மாா்கழி உத்ஸவம் தொடக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள ஒற்றுமை மண்டபத்தில் மாா்கழி உத்ஸவம் திங்கள்கிழமை தொடங்கியது. ஆரோவில் சா்வதேச நகரில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் மாா்கழி உத்ஸவம் நிகழ்ச்சி ... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி காவலாளி உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மின் வேலியில் சிக்கி காவலாளி உயிரிழந்தாா். பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டையைச் சோ்ந்த சுகுமாா், தனது கரும்புத் தோட்டத்தில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கொங்கராயனூா், புதுகாலனியைச் சோ்ந்தவா் குப்... மேலும் பார்க்க

ஓடையில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மற்றொரு மாணவியை தேடி வருகின்றனா். வானூா் வட்டம், பழைய கொஞ்சிமங்கலத்தைச் சோ்ந்த காத்தவராயன் மகள் ந... மேலும் பார்க்க