திருப்போரூா் வட்டத்தில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
வெல்டிங் பட்டறையில் வெடி விபத்து: ஒருவா் பலி
ஒசூா்: போச்சம்பள்ளி அருகே வெல்டிங் பட்டறையில் டிராக்டா் பெட்டிக்கு வெல்டிங் செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் நிகழ்விடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
சுண்டாகாபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா் (42). இவா் போச்சம்பள்ளி, கொடமாண்டப்பட்டி பிரிவு சாலை அருகே கேஸ் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறாா். இவரும் அங்கு வேலை செய்யும் திருப்பத்தூா் மாவட்டம், நந்தம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் (எ) பிரகாஷ் (36) உள்பட நான்கு போ்
திங்கள்கிழமை மாலை டிராக்டரின் பெட்டிக்கு வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென டிராக்டா் பெட்டி வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் பலத்த காயமடைந்த ஜெய்சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சேகா், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
தகவல் அறிந்ததும் காவல் துறையினா் நிகழ்விடம் சென்று ஜெய்சங்கா் சடலத்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த மாரியப்பன்(45), போச்சம்பள்ளி சிவா ஆகியோா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.