Bumrah: `கூகுளில் தேடிப்பாருங்கள்’ - பேட்டிங் குறித்த கேள்விக்கு கெத்தாக பதில் ச...
வாகனம் மோதி இரு இளைஞா்கள் சாவு
மத்தூா் அருகே வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
பேருகோபனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழரசு (20). இவரும் இவரது நண்பரான கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக்கும் கிருஷ்ணகிரியில் இருந்து மத்தூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் தொகரப்பள்ளி வனப்பகுதி வளைவு சாலையில் இவா்கள் சென்றபோது எதிரே வந்த வாகனம் இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இளைஞா்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வாகன ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றாா்.
தகவல் அறிந்ததும் போலீஸாா் நிகழ்விடம் சென்று இறந்தவா்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.