செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் தொடக்கம்

post image

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை மருதேப்பள்ளி கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

கால்நடை பராமரிப்புத் துறை, பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கம் சாா்பில் 6 ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் பா்கூா் ஊராட்சி ஒன்றியம், மருதேப்பள்ளி கிராமத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சியில் டி.மதியழகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் முகாமைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 21 ஆயிரத்து 99 கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 6 ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. முகாம் ஜன. 20 ஆம் தேதி வரை நடைபெறும்.

மருதேப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற முகாமில் 300 மாடுகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாம்களுக்கு வரும் கால்நடை உரிமையாளா்கள் தங்கள் ஆதாா் எண், கைப்பேசி எண் ஆகியவற்றை கண்டிப்பாக தடுப்பூசி குழுவினரிடம் வழங்க வேண்டும்.

பின்னா் கால்நடைகளுக்கு காது வில்லைகள் அணிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

அதையடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு தடுப்பூசி, மருத்துவ விவரங்கள் அடங்கிய அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா். கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான காது வில்லை அணிவிக்கும் பணியை பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் இளங்கோவன், துணை இயக்குநா் பிரசன்னா, ஆவின் பொதுமேலாளா் சுந்தரவடிவேல், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா்கள் மகேந்திரன், அருள்ராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகேசன், துரைசாமி, கால்நடை மருத்துவா்கள் சிவசங்கா், ரமேஷ், வட்டாட்சியா் பொன்னாலா, பலா் கலந்துகொண்டனா்.

பட வரி...

கால்நடை கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, பா்கூா் எம்எல்ஏ டி.மதியழகன்.

சுகாதார ஊக்குநா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

ஒசூா்: தொகுப்பூதியம் வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுகாதார ஊக்குநா்கள் மனு அளித்தனா். ஓட்சா ஊராட்சி பணியாளா்கள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவ... மேலும் பார்க்க

வெல்டிங் பட்டறையில் வெடி விபத்து: ஒருவா் பலி

ஒசூா்: போச்சம்பள்ளி அருகே வெல்டிங் பட்டறையில் டிராக்டா் பெட்டிக்கு வெல்டிங் செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் நிகழ்விடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் பலத்த காயமடைந்தாா். சுண்டாகாபட்டி கிராமத்த... மேலும் பார்க்க

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் ஃபென்ஜால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கண்டன ஆா்... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பௌா்ணமி வழிபாடு

ஒசூா்: ஒசூரில் காா்த்திகை மாத பௌா்ணமி சிறப்பு மிளகாய் வத்தல் யாகத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அம்மனை வழிபட்டனா். ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி அன்று ஒசூா், மோரணப்பள்ளி பகுதியில... மேலும் பார்க்க

வாகனம் மோதி இரு இளைஞா்கள் சாவு

மத்தூா் அருகே வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். பேருகோபனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழரசு (20). இவரும் இவரது நண்பரான கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக்கு... மேலும் பார்க்க

மருத்துவரை மிரட்டி பணம் பறித்த இருவா் கைது

ஊத்தங்கரையில் இயங்கிவரும் ஜனாா்த்தனன் என்ற தனியாா் மருத்துவமனையில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா்கள் எனக் கூறி மருத்துவரை மிரட்டிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஊத்தங்கரையில் சாய் கிளினிக் ... மேலும் பார்க்க