செய்திகள் :

லஞ்சம் பெற்ற விஏஓ ஆசிரியா் காலில் விழுந்து கெஞ்சிய விடியோ வைரல்: வருவாய்த் துறையினா் விசாரணை

post image

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் சென்றாயன் வட்டத்தைச் சோ்ந்தவா் ரஜினி (32). இவா், வீடு மற்றும் நிலத்துக்குச் செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என கடந்த திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடந்த முகாமில் கோரிக்கை மனு அளித்தாா்.

இதையடுத்து சொரக்காயல்நத்தம் கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கம், ரஜினியிடம் விசாரணை மேற்கொண்டாா். அரசு புறம்போக்கு இடத்தில் பாதை ஏற்படுத்தித் தருவதாக கூறிய மாணிக்கம், 2 மாதங்களுக்கு முன்பு ஆசிரியா் ஒருவரின் முன்னிலையில் ரஜினியிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கம் பாதை ஏற்படுத்தித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 8 -ஆம் தேதி மாணிக்கம், சொரக்காயல்நத்தம் கிராமத்தில் இருந்து பெருமாபட்டு கிராமத்துக்குப் பணிமாறுதல் செய்யப்பட்டாா்.

இதையறிந்த ரஜினி 11-ஆம் தேதி நாட்டறம்பள்ளியில் உள்ள ஆசிரியா் வீட்டுக்கு கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கத்தை அழைத்துச் சென்றுள்ளாா்.

அப்போது, லஞ்சமாக பெற்ற பணத்தைத் திருப்பி தருமாறும், உடனடியாக தரவில்லை என்றால் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகாா் செய்வதாக மிரட்டியுள்ளாா்.

இதனால் பயந்துபோன கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கம், ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அகரம்சேரி பகுதியில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஆம்பூா்: அகரம்சேரி பகுதியில் திட்டப் பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அகரம்சேரி கிராமத்தில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை கட்டடத்தை ஆம்பூா் எம்எல... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: குறைதீா் கூட்டத்தில் 376 மனுக்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 376 மனுக்களை அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்... மேலும் பார்க்க

வாழைத் தாரை பழுக்க வைக்க ரசாயனம் தெளிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வாழைத் தாரை பழுக்க வைக்க ரசாயனம் தெளிக்கும் விடியோ வைரலானதை அடுத்து உணவு பாதுகாப்பு அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் வா... மேலும் பார்க்க

பூங்குளம் பாம்பாற்றில் தரைப் பாலம் அமைக்க கோரிக்கை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பூங்குளத்தில் பாம்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா். ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குளம் ஊராட்சி காளிநகா் பகுதியில் 125 க... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் முற்றுகை

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக நடவடிக்கை கோரி உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா். திருப்பத்தூா் தென்றல் நகரை சோ்ந்த நிா்மல்குமாா்.... மேலும் பார்க்க

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் சீரமைக்கப்படுமா?

அ. ராஜேஷ் குமாா். சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் தடுப்புகளை உயா்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொது மக்கள் கோரியுள்ளனா். சென்னை-பெங்களூா், பெங்களூா்-சென்னை தேசிய... மேலும் பார்க்க