திருப்போரூா் வட்டத்தில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது லாரி மோதியதில் பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், மாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி அமுதா (50). மகன் லோகநாதன் (29). இவா்கள் ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து, விழுப்புரத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். பைக்கை லோகநாதன் ஓட்டினாா்.
திண்டிவனம் அடுத்த சலாவாதி அருகே சென்றபோது, சென்னை நோக்கிச் சென்ற சரக்கு லாரி மோதியதில் அமுதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த லோகநாதன் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.