Ooty: குளிரைச் சமாளிக்க வீட்டிற்குள் தீ மூட்டிய இளைஞர், புகையால் நேர்ந்த சோகம்; ...
விடாமுயற்சி விலகல்... பொங்கல் வெளியீட்டை அறிவித்த சிறிய படங்கள்!
விடாமுயற்சி விலகலைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு சிறிய படங்கள் வெளியாகவுள்ளன.
நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த லைகா நிறுவனம், சில தவிர்க்க முடியாத காரணத்தால் விடாமுயற்சி பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகுகிறது. விரைவில் மறுஅறிவிப்பு வெளியாகும் என புதிய அறிவிப்பை வெளியிட்டனர். இது அஜித் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதையும் படிக்க: 7ஜி ரெயின்போ காலனி - 2 புதிய போஸ்டர்!
இதனால், பொங்கல் விடுமுறையைப் பயன்படுத்த பிப்ரவரி வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டிருந்த சிறிய படங்கள் பொங்கல் வெளியீடுக்கு தயாராகியுள்ளன.
குறிப்பாக, மலையாள நடிகர் ஷேன் நிகேம் நடிப்பில் உருவான தமிழ்ப்படமான, ‘மெட்ராஸ்காரன்’ மற்றும் நடிகர் சிபி சத்யராஜ் நடித்த, ‘10 ஹவர்ஸ்’ (10 hours) ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுபோக, காதலிக்க நேரமில்லை திரைப்படத்தையும் பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாலாவின் வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.