செய்திகள் :

அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிட கூடாது: சீமான்

post image

அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிட கூடாது. எனக்கும் அத்தகைய கோபம் இருக்கிறது. அதற்காக சாட்டையில் அடித்துக் கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்வது தேவையற்றது. தவறு செய்பவர்களையும் அதற்கு காரணமாணவர்களையும் தான் சாட்டையால் அடிக்க வேண்டும்.

தேர்தல் தோறும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தங்களது தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசை வலியுறுத்தி, கடுமையான சட்டம் இயற்ற அண்ணாமலை சொல்லலாம்.

அதாவது, யார் ஒருவர் வாக்காளருக்கு பணம் கொடுக்கிறாரோ அவர், 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை என்ற சட்டத்தை மத்திய அரசை வலியுறுத்தி அண்ணாமலை பெற்று தந்தால், ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கோ, தேர்தலில் நிற்பதற்கோ யாரும் முன் வர மாட்டார்கள்.

3ஆவதும் பெண் குழந்தை: மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கணவர்

அடுத்ததாக, இலவசங்களால் மக்களுக்கு ஒருபோதும் நன்மை விளைய போவதில்லை. அதையும் அண்ணாமலை உணர்ந்து செயல்பட வேண்டும். இவை இரண்டையும் கணக்கில் கொள்ளாமல் திமுக அரசை தோற்கடிக்க முடியாது.

பாமக தலைமையின் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் விரைவில் சரியாகிவிடும். திமுக அரசு தமிழ்நாட்டில் எந்தவித ஆகச்சிறந்த திட்டங்களையும் மக்களுக்கு கொடுக்கவில்லை. மாறாக காலை உணவு திட்டம் என்ற பேரில் வாரத்திற்கு ஐந்து நாட்களும் உப்புமா போடும் அரசாக இருக்கிறது என்றார்.

புதுச்சேரியில் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்

மன்மோகன் சிங் மறைவால் அரசு சார்பில் கேளிக்கை நிகழ்ச்சி ரத்து செய்யபட்டதால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.2024-ஆம் ஆண்டு முடிந்து 2025-ஆம் ஆண்டு பிறந்துள... மேலும் பார்க்க

உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் ஆளுநர் தரிசனம்

குடவோலை முறை கல்வெட்டுகள் உள்ள பழைமைவாய்ந்த உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் தரிசனம் செய்து கல்வெட்டுகளைப் பார்வையிட்டார். காஞ்சிபுரம் மாவட... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் டிசம்பரில் "திருக்குறள் வாரம்': முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

"ஆண்டுதோறும் டிசம்பர் கடைசி வாரம் குறள் வாரமாக கொண்டாடப்படும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.ஆண்டுதோறும் 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்று... மேலும் பார்க்க

2024-இல் தமிழகத்தில் இயல்பைவிட 28% கூடுதல் மழை பதிவு: வானிலை ஆய்வு மையம்

2024-ஆம் ஆண்டில் தமிழகத்தில் இயல்பைவிட 28 சதவீதம் மழை அதிகமாக பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலசந்திரன் தெரிவித்தாா். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில்... மேலும் பார்க்க

இரு புதிய கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்

கட்டண அதிகரிப்பு காரணமாக பிற முன்னணி தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளா்கள் விலகிவரும் நிலையில், அவா்களைக் கவரும் வகையில் இரண்டு புதிய கட்டணங்களை அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல்... மேலும் பார்க்க

16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மூத்த எஸ்பி அந்தஸ்து

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மூத்த (சீனியா்) எஸ்பி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் 2012-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளாக பொறுப்பேற்ற 16 போ், 2025-ஆம் ஆண்டு முதல் சீனியா் எஸ்பி அந... மேலும் பார்க்க