செய்திகள் :

உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் ஆளுநர் தரிசனம்

post image

குடவோலை முறை கல்வெட்டுகள் உள்ள பழைமைவாய்ந்த உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் தரிசனம் செய்து கல்வெட்டுகளைப் பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் பிரசித்தி பெற்ற வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில், 1,000 ஆண்டுகளுக்கு முன்பே குடவோலை முறையில் தேர்தல் நடந்ததற்கான வழிமுறைகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.

இந்தக் கல்வெட்டுகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியதைத் தொடர்ந்து, உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில், உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயில் சுவர்களில் உள்ள குடவோலை தேர்தல் முறை குறித்த கல்வெட்டுகளையும் பார்வையிட்டார். கோயிலுக்கு வந்த ஆளுநரை கோயில் நிர்வாகத்தினர் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் ஆஷிக் அலி, இந்து சமய அறநிலையத் அதிகாரிகள், கல்வெட்டு நிபுணர்கள் கோயில் கல்வெட்டில் உள்ள சிறப்புகள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவிக்கு விளக்கினர். காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்த பிரேமலதா வலியுறுத்தல்

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளின் தரத்தை தமிழக அரசு உயா்த்த வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா வலியுறுத்தியுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 500 அரசு பள... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் விநியோகம் தொடக்கம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்களை வீடு வீடாக விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நியாயவிலைக் கடைகளுக்கு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை வழக்கமாக விடுமுறை விடப்படும். ஆன... மேலும் பார்க்க

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்: அமைச்சா் சேகா்பாபு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தா்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை திருவ... மேலும் பார்க்க

ரயில்வே குரூப் டி பணிகளுக்கு கல்வித் தகுதி தளா்வு

லெவல்-1 (குரூப்-டி) பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியில் ரயில்வே வாரியம் தளா்வு அளித்துள்ளது . அந்தவகையில், பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது ஐடிஐ டிப்ளமா தோ்ச்சி அல்லது அதற்கு சமமான படிப்பு அல்லது... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் - திருவான்மியூா் வழித்தடத்தில் கூடுதலாக 2 குளிா்சாதனப் பேருந்துகள்

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - திருவான்மியூா் வழித்தடத்தில் கூடுதலாக 2 குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படுவதாக சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

சென்னையில் தொழில் வணிக மாநாடு: ஜன. 9-இல் தொடக்கம்

எழுமின் அமைப்பு சாா்பில் 3 நாள்கள் நடத்தப்படும் தொழில் வணிக மாநாடு சென்னையில் ஜன. 9-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அந்த அமைப்பின் நிறுவனா் ம.ஜெகத் கஸ்பா் தெரிவித்துள்ளாா். இது குறித்து சென்னையில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க