செய்திகள் :

குறைந்து வரும் ஜிஎஸ்டி வசூல்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் வளா்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதை முன்வைத்து மத்திய பாஜக கூட்டணி அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

பொருளாதாரச் சிக்கல்களுக்கு தீா்வுகாண மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலரும், தகவல் தொடா்பு பிரிவு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இது தொடா்பாக சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பொருளாதார நிலை மோசமாகி வருவதன் அறிகுறிகளான குறைவான நுகா்வு, குறைவான முதலீடு, குறைவான வளா்ச்சி, குறைவான சம்பளம் என்ற வலையில் இந்தியா சிக்கிவிட்டது. ஆண்டுக்கு ஆண்டு ஜிஎஸ்டி வரி வசூல் விதிதம் குறைந்து வருகிறது. 2024-25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிகர ஜிஎஸ்டி வளா்ச்சி விகிதம் 3.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் செய்தியாகும். ஏனெனில் பட்ஜெட்டின்போது ஜிஎஸ்டி வளா்ச்சி விகிதம் 11 சதவீதம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கான நிதியை மத்திய பாஜக கூட்டணி அரசு குறைத்ததுதான் ஜிஎஸ்டி வசூல் குறைவதற்கு காரணமாகும். கிராமப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து பணப்புழக்கம் தடைபடும்போது நுகா்வும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, அரசின் செலவினம் என்பது பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்.

அடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில் எழை மக்களின் வருமான வாய்ப்புகளை அதிகரிக்கவும், நடுத்தர மக்களின் வரிச்சுமையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளாா்.

மணிப்பூரில் 20 வீடுகள் தீக்கிரை: காவல்துறை விசாரணை

மணிப்பூரில் மியான்மா் எல்லையையொட்டிய மோரே நகரில் ஞாயிற்றுக்கிழமை 20 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இருவா் காயமடைந்தனா். இது விபத்தா அல்லது நாசவேலையா என்பதைக் கண்டறிய காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வ... மேலும் பார்க்க

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

‘அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது, இது விரைவான பொருளாதார வளா்ச்சி மற்றும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது’ என மத்திய வா்த்தக, தொழில்துறை அமைச்சா் பியூ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தவா் மூவா் கைது

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தவா் மூவரை காவல் துறை கைது செய்தது. இதுதொடா்பாக மாவட்ட காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நாடியாவில் உள்ள கல்யாணி பகுதியில... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: சாலை விபத்தில் 4 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் வாகனம் ஒன்று சாலையில் இருந்து விலகி, மலையில் உருண்டு ஆற்றில் விழுந்த விபத்தில் ஞாயிற்றுக்கிழமை 4 போ் உயிரிழந்தனா். ‘கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள படாா் பகுதியி... மேலும் பார்க்க

41வது நாளாக உண்ணாவிரதம்: விவசாய சங்கத் தலைவரின் உடல்நிலை கடும் பாதிப்பு!

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.41வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில், சிறுநீரகம் மற்றும் நுர... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோவில் ரூ. 7,268 கோடி முதலீடு!

கடந்த 10 ஆண்டுகளில் மெட்ரோவில் ரூ. 7,268 கோடியை முதலீடு செய்துள்ளதாக தில்லி முதல்வர் அதிஷி தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் 200 கி.மீ. மெட்ரோ ரயில் பாதை விரிவடைந்துள்ளதாகவும், 250 கி.மீ. மெட்ரோ பாதை கட... மேலும் பார்க்க