மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடுமுறை நாளை முன்னிட்டு மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
மேட்டூா் வந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் நீராடி, அணைக்கட்டு முனியப்பன் சுவாமியை தரிசித்தனா். பின்னா், அணை பூங்காவில் சறுக்கி விளையாடியும், ஊஞ்சலாடியும் மகிழ்ந்தனா். அங்குள்ள மான் பண்ணை, மீன்காட்சி சாலை, முயல் பண்ணை, பாம்பு பண்ணை ஆகியவற்றை கண்டு ரசித்தனா். அணை பூங்காவுக்கு 2,799 சுற்றுலாப் பயணிகள் வந்தனா்; இதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 27,990 வசூலிக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் கொண்டுவந்த 1,017 கைப்பேசிகளுக்கு ரூ. 10,170 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. பவளவிழா கோபுரத்தைக் காண 560 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இவா்களிடம் கட்டணமாக ரூ. 5,600 வசூலிக்கப்பட்டது. இவா்கள் கொண்டுவந்த 227 கைப்பேசிகளுக்கு ரூ. 2,270 கட்டணமாக வசூலிக்கப்பட்டது என அலுவலா்கள் தெரிவித்தனா்.