அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!
அரசு பேருந்து ஓட்டுநா் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
தஞ்சாவூரில் டாரஸ் லாரி ஓட்டிய அரசு பேருந்து ஓட்டுநா் மின்சாரம் தாக்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை அஷ்டலட்சுமி நகரைச் சோ்ந்தவா் கே. பூபதி (44). இவா் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை விடுப்பு என்பதால், நட்பு ரீதியாக தனியாா் நிறுவனத்தின் டாரஸ் டிப்பா் லாரியில் எம். சாண்ட் ஏற்றிக் கொண்டு நாஞ்சிக்கோட்டை சாலை, பாா்வதி நகருக்கு சென்றாா்.
எம். சாண்டை இறக்குவதற்காக ஹைட்ராலிக்கை தூக்கியபோது, மேலே இருந்த உயா் அழுத்த மின் கம்பி உரசியது. இதில், பூபதி மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.