அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!
கருங்கல் அருகே செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்
கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை பகுதியில் செம்மண் கடத்தியதாக 2 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தெருவுக்கடை பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக கருங்கல் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது பொக்லைன் இயந்திரம் மூலம் டெம்போவில் அனுமதியின்றி மண் அள்ளியது தெரிய வந்தது.
ஓட்டுநா்கள் தப்பிவிட்டனராம். போலீஸாா் வழக்குப் பதிந்து 2 வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.