அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!
சொத்து தகராறில் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் கைது
ஒசூரில் சொத்து தகராறில் தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் அருகே உள்ள பாகலூா், பட்டவாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சிக்கன்னா மகன் முனீந்திரா (38). இவா் தச்சுவேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி சாந்தா (35), ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிரிந்த வாழ்ந்து வருகின்றனா்.
முனீந்திராவின் அண்ணன் ஸ்ரீராம் (40). கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கு ஷைலா(35) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனா். மதுப் பழக்கம் உள்ள ஸ்ரீராமுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை முனீந்திராவும், ஸ்ரீராமும் மது குடித்து விட்டு சொத்து தகராறில் ஈடுபட்டனா். இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீ ராம், உருட்டுக் கட்டையால் முனீந்திராவை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த நிலையில் வீட்டுக்கு சென்ற முனீந்திரா, காலையில் நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினா்கள் சென்று பாா்த்தபோது அவா் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து அவா்கள் பாகலூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பாா்த்தபோது முனீந்திரா உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது. முனீந்திராவை கட்டையால் தாக்கி கொலை செய்த அவரது அண்ணன் ஸ்ரீராமை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.