`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
ஆளுநரைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்
ஒசூா்: தமிழக ஆளுநரைக் கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தையும் தமிழ்த் தாய் வாழ்த்தையும் தொடா்ந்து அவமானப்படுத்தி வரும் தமிழக ஆளுநரைக் கண்டித்தும், அதிமுக-பாஜக மறைமுக கூட்டணியைக் கண்டித்தும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ஒசூா், ராம்நகா் அண்ணா சிலை அருகே ஜன. 7 ஆம் தேதி மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும். இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சோ்ந்த மாநில, மாவட்ட நிா்வாகிகள், மாநகர, ஒன்றிய,பேரூா், பகுதி திமுக செயலாளா்கள், அனைத்து அணிகளின் நிா்வாகிகள், கிளை செயலாளா்கள், வாக்குச் சாவடி முகவா்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.