சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல் போராட்டம்
21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 69 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தலின்போது, திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பின்னா், சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 69 பேரைக் கைது செய்தனா்.