மனைவியைக் கொன்ற கணவா் கைது
ஒசூரை அடுத்த பாகலூா் அருகே கீழ்சூடாபுரம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (40). இவா், பெயிண்டா் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி கல்பனா (38).
குடும்ப பிரச்னையால் கடந்த 4 ஆம் தேதி பிளேடால் கல்பனாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தாா். இதுகுறித்து இவா்களது மகன் சேத்தன் குமாா் (19), பாகலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஆனந்தகுமாரைத் தேடி வந்தனா். இந்நிலையில் பாகலுாா் அருகே ஈச்சங்கூா் பகுதியில் பதுங்கியிருந்த ஆனந்தகுமாரை பாகலூா் காவல் ஆய்வாளா் (பொ) பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.