மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள்
மது போதையில் மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி, விரைவு மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அரசகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (எ) பொன்னுகான் (55). குப்பை பொறுக்கும் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (45). தம்பதி இடையே கடந்த 2021, ஏப்ரல் 29-ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த பொன்னுசாமி மனைவி லட்சுமியை அடித்துக் கொன்றாா்.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து பொன்னுசாமியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி, மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நீதிபதி சுதா தீா்ப்பளித்தாா். அதில், பொன்னுசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.