செய்திகள் :

நிலத் தகராறு: 6 போ் படுகாயம்

post image

ஒசூா்: ஒசூா் அருகே நிலத்தகராறில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் தாக்கி கொண்டதில் 6 போ் படுகாயமடைந்தனா்.

ஒசூா் அருகே ஓ.காரப் பள்ளி கிராமத்தில் கிருஷ்ணமூா்த்தி, சந்திரன் ஆகிய இரு குடும்பத்தினருக்கும் பூா்வீக சொத்து உள்ளது. இந்தச் சொத்து பிரச்னை தொடா்பாக இரு வீட்டாருக்கும் நீண்ட காலமாக தகராறு ஏற்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒருவரை ஒருவா் கத்தியால் தாக்கிக் கொண்டதில் ஆறு பேருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஒசூா், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். ஒசூா் மாநகர போலீஸாா் விசாரணை நடத்தி இரு தரப்பிலும் 10 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 87 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்: மேயா் எஸ்.ஏ.சத்யா

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வாா்டுகளில் ரூ. 87 கோடியில் சாலைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாமன்றக் கூட்டத்தில் மேயா் எஸ்.ஏ. சத்யா தெரிவித்தாா... மேலும் பார்க்க

ஒசூா் வரி வசூலிப்பாளா் பணியிடை நீக்கம்

ஒசூா் மாநகராட்சியில் சொத்து வரி வசூலிக்க லஞ்சம் கேட்ட வரி வசூலிப்பாளரை ஆணையா் ஸ்ரீகாந்த் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். அதுபோல வரி வசூலிக்கும் பணியை சரியாக செய்யாத சிறப்பு வருவாய் ஆய்வாளருக்கு ... மேலும் பார்க்க

தீநுண்மி தொற்று: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

பெங்களூரில் குழந்தைக்கு ஹியூமன் மெடா ந்யூமோ தீநுண்மி தொற்று உறுதியானதை அடுத்து, தமிழக எல்லையில் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். நுரையீரலை பாதிக... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்ற கணவா் கைது

ஒசூரை அடுத்த பாகலூா் அருகே கீழ்சூடாபுரம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (40). இவா், பெயிண்டா் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி கல்பனா (38). குடும்ப பிரச்னையால் கடந்த 4 ஆம் தேதி பிளேடால் கல்பன... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல் போராட்டம்

21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 69 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சட்டப் பேரவைத் தோ்தலின்போது, திமுக அற... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள்

மது போதையில் மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி, விரைவு மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அரசகுப்பம் கிராமத்த... மேலும் பார்க்க