ரோஹித், கோலி எதிர்காலம் அணித் தேர்வர்கள் கையில் இருக்கிறது: இந்திய முன்னாள் கேப்...
குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், சபரிமலை சீசன் மற்றும் வார விடுமுறையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
முக்கடல் சங்கமம் பகுதியில் அதிகாலையில் திரண்ட அவா்கள், சூரிய உதயத்தை பாா்த்து மகிழ்ந்தனா். பின்னா், படகுப் பயணம் மேற்கொண்டு, விவேகானந்தா் பாறை மற்றும் திருவள்ளுவா் சிலைக்குச் சென்று வந்தனா். புதிதாக திறக்கப்பட்ட கண்ணாடி இழை பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் நடந்து சென்று கடல் அழகை ரசித்தனா்.
சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக காந்தி மண்டபம், காமராஜா் மணி மண்டபம், சூரிய அஸ்தமனப் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும், கடற்கரை சுற்றுலாப் பகுதிகளான வட்டக்கோட்டை, சங்குத்துறை, கோவளம் ஆகியவற்றிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் வருகை காரணமாக விவேகானந்தபுரம் தொடங்கி காவல் நிலையம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.