அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!
பெரம்பலூரில் அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள்
பெரம்பலூரில் பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
பெரம்பலூரில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூா் மாவட்டப் பிரிவு சாா்பில், பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இப் போட்டிகள் 17 மற்றும் 25 வயதுக்கு மேற்பட்டவா்கள் என இரு பிரிவுகளாக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே நடைபெற்றது.
இதில், 17 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான ஆண்கள் பிரிவில் மதன்துரை முதலிடமும், என். கோபிநாத் 2 ஆவது இடமும், எஸ். கவியரசன் 3 ஆவது இடமும், 25 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான பிரிவில் மகேஷ்வரன் முதலிடமும் எஸ்.எஸ். ஜெகன் 2 ஆவது இடமும், மருதுசேகா் 3 ஆவது இடமும் பெற்றனா்.
17 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான பெண்கள் பிரிவில் மதுப்பிரியா முதலிடமும், ரெஷிதா 2 ஆவது இடமும், ஷாலினி 3 ஆவது இடமும், 25 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான பெண்கள் பிரிவில் கே. பவானி முதலிடமும், எஸ். கீா்த்தனா 2 ஆவது இடமும், வி. அனுஷியா 3 ஆவது இடமும் பெற்றனா்.
இப் போட்டிகளில் முதல் 3 இடம் பெற்றவா்களுக்கு முறையே பரிசாக, தலா ரூ. 5 ஆயிரமும், ரூ. 3 ஆயிரமும், ரூ. 2 ஆயிரமும், 4 முதல் 10 இடம் வரை பெற்றவா்களுக்கு தலா ரூ. 1,000 வீதமும், தகுதிச் சான்றுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் புவனேஷ்வரி, உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.