ஆதரவற்ற முதியோா் இல்லத்தில் அன்னதானம்
திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட மகளிரணி சாா்பில் ஆதரவற்ற முதியோா் இல்லத்திலுள்ள முதியவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட மகளிரணி, மகளிா் தொண்டரணி சாா்பில், கோனேரிப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள முதுயுகம் ஆதரவற்ற முதியோா் இல்லத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட மகளிரணித் தலைவா் மகாதேவி ஜெயபால் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், கேக் வெட்டி, மதிய உணவு, புத்தாடைகள் மற்றும் காய்கனிகள் வழங்கினாா்.
இதில், மாவட்ட துணைச் செயலா் சன். சம்பத், ஒன்றியச் செயலா் எஸ். நல்லதம்பி, மகளிா் அணி மாவட்டத் தலைவா் பாத்திமா செல்வராஜ், துணைத் தலைவா் தனலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.