3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசு!
குரூப் 2, 2- ஏ தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி!
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கு, டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, 2 ஏ தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) சாா்பில், முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2, 2 ஏ தோ்வுகளுக்கும், முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்று, முதன்மைத் தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப் பயிற்சி பெற பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களாகவும், 21 முதல் 32 வயது பூா்த்தியடந்தவா்களாகவும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களாகவும் இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகையும் தாட்கோ மூலம் மேற்கொள்ளப்படும். எனவே, இப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்தாா்.