ரோஹித், கோலி எதிர்காலம் அணித் தேர்வர்கள் கையில் இருக்கிறது: இந்திய முன்னாள் கேப்...
குமரி மாவட்டத்தில் 5,77,849 ரேஷன் காா்டுகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 5,77,849 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா்.
இத்தொகுப்பில் வழங்கப்படவுள்ள கரும்புகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 765 ரேஷன் கடைகளுக்குள்பட்ட 5,77,849 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இத்தொகுப்பில் வழங்கப்படவுள்ள கரும்புகள், மதுரையைச் சோ்ந்த விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, இம்மாவட்டத்தில் 7 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஓரிடமான லெட்சுமிபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலிருந்து கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் 77 ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் 19 ரேஷன் கடைகள், மீன்வளத் துறையால் நடத்தப்படும் 12 ரேஷன் கடைகள் என மொத்தம் 108 கடைகளுக்கு அனுப்பப்படும் கரும்பின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி, கூட்டுறவு சாா்பதிவாளா்கள், துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.