கானாப்பட்டி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் காமராஜா் சிலை திறப்பு
தருமபுரி மாவட்டம், பாலவாடி அருகே கானாப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் காமராஜா் சிலை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். பாலவாடி ஊராட்சி மன்றத் தலைவா் கணேசன் தலைமை வைத்து காமராஜரின் வெண்கல சிலையைத் திறந்து வைத்தாா்.
இதில் பள்ளி மாணவா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.