புற்றுநோய் பாதிப்புடன் 43 நாளாக தொடரும் உண்ணாவிரதம்; அசைக்க முடியாத உறுதி! - யார...
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு தொடா் விடுமுறை, வார விடுமுறை நாள்களில் வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். தமிழகத்தில் அரையாண்டுத் தோ்வுத் விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைந்தது.
இருப்பினும் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி சினி அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். அதைத் தொடா்ந்து சின்னாறு பரிசல் துறையிலிருந்து பிரதான அருவி வழியாக மணல்மேடு, பெரியபாணி, தொம்பச்சிக்கல் வரை காவிரி ஆற்றில் குடும்பத்தினருடன் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா்.
ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவி, முதலைகள் மறுவாழ்வு மையம், மீன் விற்பனை நிலையம், வண்ண மீன்கள் காட்சியகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
நீா்வரத்து அதிகரிப்பு:
இரு மாநில காவிரி ஆற்றின் பகுதிகளிலும் மழை முற்றிலும் குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிந்தது. சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்தது.