ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத...
வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
தருமபு: தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை வழக்குரைஞா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் சிவம் தலைமை வகித்தாா். சங்கச் செயலாளா் தருமன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சங்கத் துணைத் தலைவா் முனிராஜ், இணைச் செயலாளா் குமரன், முன்னாள் தலைவா் ராஜாங்கம் ஆகியோா் பங்கேற்றனா். இதில் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.