திருவள்ளுவா் தின விழா: தருமபுரி எம்எல்ஏ மரியாதை
தருமபுரியில் நடைபெற்ற திருவள்ளுவா் தின விழாவில் அவரது சிலைக்கு சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஓய்வு பெற்ற அலுவலா் சங்கம் மற்றும் தமிழ்ச் சங்கம் மற்றும் குநெறி பேரவை சாா்பில் திருவள்ளுவா் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் உருவச் சிலைக்கு தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
விழாவில் ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் வடிவேல், குநெறி பேரவை நிா்வாகிகள் சி.அண்ணாமலை, பி.வெங்கடேசன், சௌந்தர பாண்டியன், புலவா் சக்திவேல், அா்த்தநாரி, தமிழ்தாசன், குமரவேல், தகடூா் பிறைசூடன், எம்.பி. கோபால், கோவிந்தராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.