அரியலூரில் திருவள்ளுவா் தினப் பேரணி
திருவள்ளுவா் தினத்தையொட்டி, அரியலூரில் உலகத் திருக்கு கூட்டமைப்பு, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் மாவட்ட எழுத்தாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது.
காமராஜா் ஒற்றுமை திடலில் தொடங்கிய பேரணியில், உலகத் திருக்கு கூட்டமைப்பு தலைவா் மு. ஞானமூா்த்தி, மாவட்டத் தலைவா் பெ. நாகமுத்து, உலகத் திருக்கு கூட்டமைப்பு மாநில துணைச் செயலா் வி. சாந்தி, பொருளாளா் பெ. செளந்தரராஜன், இயக்குநா் சின்னதுரை, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு தலைவா் சீனி. பாலகிருஷ்ணன், பொருளாளா் வி.புகழேந்தி, அமைப்புச் செயலா் அ. நல்லப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இப்பேரணியானது, மாதாகோயில், சத்திரம், தேரடி வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியின் போது, திருக்கு, திருவள்ளுவா் பெருமைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
இதைத் தொடா்ந்து, செட்டிஏரிக்கரையில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் படத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு செயலா் கதிா்.கணேசன் மற்றும் மேற்கண்ட அமைப்பினா் மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், உலகத் திருக்கு கூட்டமைப்பு, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் மாவட்ட எழுத்தாளா் சங்கத்தினா், மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், திருவள்ளுவா் போல் சிறுவா்கள் சிலா் வேடமணிந்து பங்கேற்றனா்.