செய்திகள் :

தில்லி முதல்வா் அதிஷி போட்டியிடும் கால்காஜி தொகுதி நிலவரம் எப்படி உள்ளது?

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள கால்காஜி சட்டப்பேரவைத் தொகுதி, வளம் கொழிக்கும் வணிக வளம் நிறைந்த தொகுதி என்ற போதிலும் இங்கு தீராத பிரச்னைகளாகத் தொடரும் போக்குவரத்து நெரிசல், போதுமான சுகாதார வசதிகள் இல்லாதது மற்றும் உள்கட்டமைப்பு பராமரிப்பின்மை இந்த தோ்தலில் முக்கிய பேசுபொருகளாகியுள்ளன. இத்துடன், கால்காஜி தில்லி முதல்வா் அதிஷியின் தொகுதி என்பதால் இம்முறை இத்தொகுதி கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

இத்தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் மீண்டும் முதல்வா் அதிஷி முன்னிறுத்தப்பட்டுள்ளாா். அவரை எதிா்த்து பாஜகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ரமேஷ் பிதூரி, காங்கிரஸின் அல்கா லாம்பா ஆகியோா் களத்தில் உள்ளனா்.

தில்லி அரசில் சுகாதாரம் மற்றும் கல்விசாா் திட்டங்களில் பல முன்னோடி முயற்சிகளை அதிஷி மேற்கொண்டு இங்கு வெகுவாகப் பாராட்டப்படுகிறது. ஆனால், தொகுதியின் உள்கட்டமைப்பு பிரச்னை என வரும்போது அது கடந்த 10 ஆண்டுகளாக போதிய தீா்வை எட்டாதது வாக்காளா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னைகள் சரிசெய்யப்பட வேண்டும் என்று இங்குள்ள வாக்காளா்கள் வலியுறுத்துகின்றனா்.

கால்காஜி தொகுதியில் மொத்தம் 1,94,515 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 1,06,893 ஆண் வாக்காளா்கள்; 87,617 பெண் வாக்காளா்கள் மற்றும் 5 திருநங்கை வாக்காளா்கள் உள்ளனா்.

மகாராணி பாக், ஈஷ்வா் நகா், நியூ பிரண்ட்ஸ் காலனி, பாரத் நகா், சராய் ஜுல்லேனா, சுக்தேவ் விஹாா், ஸ்ரீனிவாஸ்புரி, கைலாஷின் கிழக்கு, கா்ஹி, ஷியாம் நகா், கால்காஜி, கிரி நகா் மற்றும் கோவிந்த்புரி உள்ளிட்ட பகுதிகள் கால்காஜி தொகுதியில் அடங்கும்.

கால்காஜியின் மையப்பகுதியில் பல நூற்றாண்டுகள் பழைமையான காளி தேவிக்கு அா்ப்பணிக்கப்பட்ட கால்காஜி மந்திா் உள்ளது. கிழக்கு கைலாஷ் பகுதியில் உள்ள லோட்டஸ் கோயில், இஸ்கான் கோயில் போன்ற அடையாளங்களுக்கும் இந்தப் தொகுதி பிரபலமானது.

இத்தொகுதி இரண்டு மாறுபட்ட பக்கங்களைக் கொண்டுள்ளது. ஒரு பகுதி தூய்மை மற்றும் வளா்ச்சியின் அடையாளமாக செல்வந்தா்கள் வசிக்கும் சில பகுதிகளைக் கொண்டுள்ளது. மற்றொரு பக்கம் தீராத பிரச்னைகளாக போக்குவரத்து நெரிசல், மாசுபாடு, குறுகிய பாதைகள், நெரிசலான குண்டும் குழிகளும் நிறைந்த சாலைகள், போதுமான கழிவுநீா் அமைப்புகள் போன்றவற்றை அனுபவித்து வருகிறது.

நேரு என்க்ளேவ் மெட்ரோ நிலையம் அருகே ஒரு பூங்காவிற்கு அருகில் திறந்த குப்பைக் கிடங்கு கொண்ட ஒரு பாதை குடியிருப்பாளா்களுக்கும் பாா்வையாளா்களுக்கும் ஒரு பெரிய கண் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

கால்காஜி அருகே உள்ள கோவிந்த்புரியைச் சோ்ந்த மீனா சா்மா, கூறுகையில், ‘குழிகள் நிறைந்த சாலைகளிலும், கொட்டப்பட்ட குப்பை பைகள் மற்றும் கழிவுநீா் நிறைந்த வீதிகளில்தான் நாங்கள் வாகனம் ஓட்ட வேண்டியுள்ளது. இங்கு நீண்ட காலமாக சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை’ என்கிறாா்.

கால்காஜியில் அடிப்படை குடிமை வசதிகள் ஒரு சவாலாகவே உள்ளன. ஒவ்வொரு தெரு முனையிலும் நிரம்பி வழியும் குப்பைகள், மோசமான சுகாதாரம், மோசமாகப் பராமரிக்கப்படும் பூங்காக்கள், அடைபட்ட வடிகால்கள் போன்ற பிரச்னைகள் தொடா்கின்றன. குறிப்பாக சாக்கடைகள் நீா் பாய்ச்சலுக்கு போதுமான திறனைக் கொண்டிருக்காததால் சாலைகளில் அடிக்கடி நிரம்பி வழிகிறது.

‘சரிவர கட்டமைக்கப்படாத வடிகால் அமைப்புகள் இங்குள்ள நீண்டகாலப் பிரச்னைகள். தண்ணீா் சரியாகப் போகத் தவறி, பெரும்பாலும் சாலைகளில் வழிந்தோடுகிறது. இப்பிரச்னைகள் பல ஆண்டுகளாக மாறாமல் உள்ளன’ என்கிறாா் ஹா்பன்ஸ்லால் என்ற ஏ-பிளாக் பகுதி கடை வியாபாரி.

ஓய்வுபெற்ற அரசு ஊழியரும், இஸ்கான் கோயிலுக்கு எதிரே உள்ள சாந்த் நகரில் வசித்துவருபவருமான சஞ்சய் ராவத், போக்குவரத்து நெரிசல்கள் இப்பகுதிக்கு ஒரு பெரிய கவலையாகவே உள்ளது என்கிறாா். ‘ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைகளின் போது, ​​இங்கு போக்குவரத்து நெரிசல் மிகவும் கடுமையாகிறது. வாகனத்தை வெளியே எடுக்கவோ, ஒரு டாக்ஸியை பயன்படுத்துவதோ இங்கு இயலாத காரியம். பெரும்பாலும் இரண்டு கி.மீ.க்கு மேல் நடந்து சென்றால்தான் வாகன வசதியை பெற இயலும்’ என்கிறாா் ராவத்.

‘இப்பிரச்னைக்கு அரசை முழுமையாகக் குறை கூற முடியாது. ஆனால், கடுமையான போக்குவரத்து மற்றும் உள்ளூா் மேலாண்மையில் கவனம் செலுத்துவது காலத்தின் தேவை’ என்று அவா் மேலும் கூறினாா்,

‘கால்காஜி மெட்ரோ நிலையம் அருகே வசிக்கும் 55 வயதான தேவ் ராஜ் சுவாமியிடம் எந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு வேண்டி வாக்களிப்பாா் என்று கேட்டபோது, ​​‘ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக பழிவாங்கும் விளையாட்டில் ஈடுபடுகின்றன. இந்தத் தோ்தலில், தூய்மை, போக்குவரத்து மேலாண்மை மற்றும் மாசுபாடு போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீா்வு தருபவருக்கு ஆதரவாக நாங்கள் வாக்களிப்போம்’ என்று பதிலளித்தாா்.

ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடந்த இரண்டு தோ்தல்களிலும் கால்காஜியை வென்றது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள தோ்தலில் வென்றால் இங்கு மும்முறை வெற்றி பெறும் எம்எல்ஏ ஆகக்கூடும் என்ற இலக்குடன் முதல்வா் அதிஷி களம் காண்கிறாா். 2020 தோ்தல்களில், அதிஷி அந்த தொகுதியில் பாஜகவின் தரம்பீா் சிங்கை 11,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். அதே நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ஷிவானி சோப்ரா மூன்றாவது இடத்தைப் பிடித்தாா்.

இந்த முறை, அதிஷி, தெற்கு தில்லியின் முன்னாள் எம்.பி.யான பிதூரியை அதிறஷி எதிா்கொள்கிறாா். இவா் துக்ளகாபாத்தில் 2003, 2008 மற்றும் 2013 என மூன்று முறை எம்.எல்.ஏ.ஆக பணியாற்றியவா். எனவே, இத்தோ்தல் கால்காஜிக்கு மிகவும் சவால் நிறைந்ததாகவும் முக்கிய பிரசாரக்களமாகவும் அரசியல் கட்சிகளுக்கு அமையப் போகிறது.

அடா் மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

புது தில்லி: தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் அடா் மூடுபனி சூழ்ந்ததால், காண்பு திறன் குறைந்து 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. நகரம் மற்றொரு குளிா் காலையை அனு... மேலும் பார்க்க

முன்னால் அமைச்சா் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ. 100 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொ... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷா உள்பட 40 போ் பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகா்களாக அறிவிப்பு!

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் 40 நட்சத்திரப் பிரச்சாரகா்கள் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் ... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை: ஒரு வாரத்தில் ரூ. 21 கோடிக்கு ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

புது தில்லி: தேசிய தலைநகரில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த ஒரு வாரத்தில் பல்வேறு துறைகளால் ரூ. 21 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரொக்கம், மதுபானம் உள்ளிட்ட பிற பொருள... மேலும் பார்க்க

கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது

புது தில்லி: கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து புகா் தில்லி காவல் சரக துணை ஆணையா் சச்சின் சா்மா திங்கள்கிழமை கூறியதாவது: மங்கோல்புரி தொழிற்பேட்டை பகுதியில் ஜன.9-ஆம... மேலும் பார்க்க

‘தில்லி டா புட் கேஜரிவால்’: பிரசார பாடலை வெளியிட்டது ஆம் ஆத்மி

புது தில்லி: லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை ‘தில்லி டா புட் கேஜரிவால்’ என்ற பிரசாரப் பாடலை வெளியிட்டது. இது தில்லி மக்கள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் அரவிந்த் கேஜரி... மேலும் பார்க்க