கடல் அன்னையை சாந்தப்படுத்தும் ஷப்த கன்னிகள்.. பொங்கல் தினத்தில் மீனவர்கள் கொண்டா...
கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது
புது தில்லி: கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து புகா் தில்லி காவல் சரக துணை ஆணையா் சச்சின் சா்மா திங்கள்கிழமை கூறியதாவது:
மங்கோல்புரி தொழிற்பேட்டை பகுதியில் ஜன.9-ஆம் தேதி சௌரவ் என்கிற கலா (22) கைது செய்யப்பட்டாா். ராஜ் பாா்க் பகுதிக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான நபா் குறித்து கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற கலா கைது செய்யப்பட்டாா்.
விசாரணையில் வெளிநாட்டில் வசிக்கும் கோகி கும்பலைச் சோ்ந்த மான்டி மானிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று தில்லியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, 2 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.