செய்திகள் :

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

16.01.2025

மேஷம்

இன்று பிறருக்குக் கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்கமுடியாத நிலைகள் ஏற்படக்கூடும். திருமண சுபகாரிய முயற்சிகளைச் சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. புத்திரவழியில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு சற்றே அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 6

ரிஷபம்

இன்று செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் நிறைய செலவுசெய்ய நேரிடும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

மிதுனம்

இன்று நாள் சுமாராகத்தான் இருக்கும். முதலீட்டினை எடுக்க அரும்பாடுபட வேண்டி வரும். வருமானம் போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்குக் கிடைக்கமாட்டார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

கடகம்

இன்று பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில்ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. வரவேண்டிய பணப்பாக்கிகள் மட்டும் இழுபறி நிலையிலேயே இருந்து வரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை

அதிர்ஷ்ட எண்: 5, 9

சிம்மம்

இன்று இடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரைத் தவிர்த்துவிடுவது நல்லது. மாணவ-மாணவியர் விளையாட்டுப்போட்டிகளில் பல பரிசுகளைத் தட்டிச்செல்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

கன்னி

இன்று கல்வி பயில்பவர்கள் சற்றுக்கூடுதல் கவனம்செலுத்திப் படித்தால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறமுடியும். கல்விக்காக நீங்கள் அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கப்பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1, 3

துலாம்

இன்று நல்ல நண்பர்களின் உதவிகள் தக்கசமயத்தில் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

விருச்சிகம்

இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2, 6

தனுசு

இன்று தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். எந்தவொரு புதிய முயற்சியிலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 5

மகரம்

இன்று தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 9

கும்பம்

இன்று உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். புத்திரர்களால் மனசஞ்சலங்களும், தேவையற்ற வீண்செலவுகளும் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3

மீனம்

இன்று முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலையில் கடுமையான நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். உற்றார்-உறவினர்களிடையே வீண்விரோதங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 7

22 ஆண்டுகளுக்குப் பின்.. வெகுசிறப்பாக நடைபெற்ற நடராஜர் கோயில் தெப்போற்சவம்!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் நடராஜர் கோயில் தெப்போற்சவம் புதன்கிழமை இரவு வெகுசிறப்பாக நடைபெற்றது.கடலூர் மாவட்டம். சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன திருவிழாவின் போ... மேலும் பார்க்க

அனுபமா, தனிஷா-அஸ்வினி முன்னேற்றம்

புது தில்லி: இந்தியா ஓபன் பாட்மின்டன் சூப்பர் 750 போட்டியில் ஒற்றையர் பிரிவில் அனுபமா, இரட்டையர்பிரிவில் தனிஷா க்ரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.இந்திய பாட்மின்டன் ச... மேலும் பார்க்க

வரலாறு படைத்தனா் இந்திய மகளிா் பிரதிகா-ஸ்மிருதி அதிரடி

ராஜ்கோட்: பிரதிகா ரவால்-ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் அதிரடியால் அயா்லாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது இந்திய அணி... மேலும் பார்க்க

ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, கௌஃப், ஒஸாகா முன்னேற்றம்: ஒலிம்பிக் சாம்பியன் ஸெங், கேஸ்பா் ருட் அதிா்ச்சித் தோல்வி

மெல்போா்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜாம்பவான் ஜோகோவிச், அல்கராஸ், மகளிா் பிரிவில் சபலென்கா, கோகோ கௌஃப், நவோமி ஒஸாகா ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். கடந்த ஆண்டு ரன்னரும், ஒலிம்பிக் ச... மேலும் பார்க்க

ஒடிஸாவை வீழ்த்தியது சூா்மா கிளப்

ராஞ்சி: ஹாக்கி இந்தியா லீக் தொடா் மகளிா் பிரிவில் ஒடிஸா வாரியா்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சூா்மா ஹாக்கி கிளப் அணி.இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புதன்கிழமை ராஞ்சியில் நடைபெற்றது. தொடக... மேலும் பார்க்க

துளிகள்...

ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணி சாா்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சா்மா, இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோா் இணைந்துள்ளனா். வான்கடே மைதானத்தில் கேப்டன் ரஹானேவுடன் ரோஹித் ... மேலும் பார்க்க