செய்திகள் :

``பொன்முடி மீது சேறு வீசியதாக இருவேல்பட்டு கிராமத்தினரை கைதுசெய்வதா..?" - சீமான் கண்டனம்

post image

கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அப்போது, விழுப்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிடச் சென்றபோது சிலர் அவர்மீது சேற்றை வீசினர். இந்த சம்பவம் அந்த சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் பொன்முடி

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக இருவேல்பட்டு கிராமத்தினர் சிலரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைதுசெய்து கொண்டுபோவது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்து, அமைச்சர் பொன்முடி பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற மனிதப்புனிதரா? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இது குறித்த அறிக்கையில் சீமான், ``தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராம மக்களை காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச்செல்லும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. சிறிதும் மனச்சான்றற்ற திமுக அரசின் இத்தகைய கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகள், கால்நடைகள், விளைவித்த பயிர்கள் என அனைத்தையும் இழந்து வாழ்வா-சாவா நிலையிலிருந்த மக்களை உரிய நேரத்தில் சந்தித்து துயர்துடைப்பு உதவிகள் செய்யாத தமிழ்நாடு அரசின் மீதான அறச்சீற்றத்தின் வெளிப்பாடாக யாரோ ஒருவர் அமைச்சர் மீது சேற்றினை வீசியதற்காக, வன்மம் கொண்டு, ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு, அப்பாவி கிராம மக்கள் அனைவரையும், பொங்கல் விழாவினைக்கூட நிம்மதியாக கொண்டாடவிடாமல் குரூர மனப்பான்மையுடன் கைது செய்து சிறையிலடைப்பது என்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

சீமான்

வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை, அவர்கள் துன்பப்படும் வேளையில் சென்று சந்திக்காது மக்களைத் துயரச்சேற்றில் தள்ளிய அமைச்சருக்கும், திமுக அரசுக்கும் என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது? அமைச்சர் பொன்முடி பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற மனிதப்புனிதரா? மகளுக்கும் ஆயிரம் - அம்மாவுக்கும் ஆயிரம் என்றும், ஓசி பஸ் என்றும் தமிழ்நாட்டு மகளிரை இழித்துப் பேசியது, மனு கொடுக்க வந்த மூதாட்டியைத் தலையில் அடித்து தாக்கியது என அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்ட அமைச்சர் பொன்முடி மீது திமுக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த கொடூரர்களை இரண்டு ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்க திறனற்ற திமுக அரசு, அமைச்சர் மீது சேறு வீசியதற்காக அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சேறு வீசியவர்களை கைது செய்ய இத்தனை வேகம் காட்டும் தமிழ்நாடு காவல்துறை அதில் நூற்றில் ஒரு பங்கு வேகத்தையாவது குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் ஏன் காட்டவில்லை? இதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா? இதுதான் திராவிட மாடல் அரசின் இந்தியா வியக்கும் சாதனையா?

பொன்முடி, ஸ்டாலின்

ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் மமதையில், ஆணவப்போக்குடன் திமுக அரசு மேற்கொள்ளும் கொடுங்கோன்மைச் செயல்கள் அனைத்திற்கும் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஆகவே, வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவேல்பட்டு கிராம மக்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Gaza : முடிவுக்கு வரும் காஸா போர் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

காஸாவில் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் காஸாவில் கடந்த 15 மாத காலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போரானது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் ... மேலும் பார்க்க

`விடுதலை படம் டு வாச்சாத்தி கொடூரம்..!’ - சிபிஎம் பெ.சண்முகம் விரிவான பேட்டி

விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வாகியிருக்கிறார் பெ.சண்முகம். அவரை நேரில் சந்தித்து, விடுதலை படம், வாச்சாத்தி சம்பவம்... மேலும் பார்க்க

Meta : 'கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு' - மார்க் கருத்துக்கு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா

இந்தியாவின் பொது தேர்தல் வெற்றி குறித்து தவறான கருத்து தெரிவித்த மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சார்பாக மெட்டா நிறுவனம் தற்பொழுது மன்னிப்பு கோரி உள்ளது. கடந்த ஜனவரி 10ஆம் தேதி பாட்காஸ்ட் (Podcas... மேலும் பார்க்க

'ரூ.100.92 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய ED' - அதிர்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கிறார். இந்த ... மேலும் பார்க்க

`அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய கிராமம் குறி வைக்கப்படுகிறது!’ - கொதிக்கும் அண்ணாமலை, அன்புமணி

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 51 செ.மீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் பெருக்கடுத்த வெள்ளம், அதன் கிளை ஆறுகளான மலட்டாறு மற்றும் ப... மேலும் பார்க்க