செய்திகள் :

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையை அடக்க வந்த அயர்லாந்து நாட்டுக்காரர்!

post image

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு காளை அடக்க வந்த அயர்லாந்து நாட்டுக்காரரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, 3-வது நாள் (ஜன. 16) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுவருகிறது.

போட்டித் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் உறுதிமொழி ஏற்று காலை 8 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் முன்னிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மொத்தமாக 5,786 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 1000 காளைகளை களமிறக்க முடிவு செய்யப்பட்டது. 500 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு களமிறக்கப்பட்டனர். வீரர்களுக்கான மருத்துவப் பரிசோதனையின் போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரும் அந்தப் பரிசோதனையில் கலந்துகொண்டார்.

யார் அவர்? என்று காவல் துறையினர் விசாரணை செய்ததில் சென்னையில் வசித்து வரும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் அந்தோணி கான்லான் (54) என்பது தெரியவந்தது. மருத்துவப் பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு வயது அதிக இருப்பதால் அவரை மாடுபிடிக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால், அவர் சோகத்துடன் பார்வையாளர்கள் இருக்கையில் போய் அமர்ந்தார்.

இதுபற்றி கான் அந்தோணி கான்லான் கூறுகையில், “நான் 14-15 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறேன். பல முறை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க வந்திருக்கிறேன். ஜல்லிக்கட்டு சிறந்த விளையாட்டு என்று நினைக்கிறேன்.

ஸ்பெயினில் நடைபெறும் காளைப் பந்தயத்தையும் பார்க்கச் சென்றிருக்கிறேன். அமெரிக்காவில் ரோடியொவிலும் காளையை அடக்கும் பந்தயம் நடைபெறுகிறது. அதையும் நான் பார்க்கச் சென்றிருக்கிறேன். இது பாரம்பரியமான விளையாட்டு. அதனால், எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதனாலேயே, இதில் பங்குபெற விரும்புகிறேன். எனது உடல் நிலை நன்றாகத் தான் இருக்கிறது. நான் 26 கி.மீ., 42 கி.மீ. மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். என்னை விளையாடவிடாமல் செய்வது வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், பரவாயில்லை” என்றார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பல்வேறு நாடுகளில் இருந்துவரும் வெளிநாட்டினர் கண்டுகளிப்பது வழக்கமானது. ஆனால், வெளிநாட்டினர் ஒருவர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துக்கொள்ள வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரூர் ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்!

கரூர் ஆர்.டி.மலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ராச்சாண்டார் திருமலையில் இன்று ஜல்லிக்கட்டு தொடங்கியது. மின்சாரம், மதுவிலக்... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் பறக்கவிடப்பட்ட ராட்சச பலூன் பாலக்காட்டில் தரையிறக்கம்

பொள்ளாச்சி சர்வதேச பலூன் விழாவில் சில நாள்களுக்கு முன் பறக்கவிடப்பட்ட ராட்சச பலூன், கேரள மாநிலம் பாலக்காட்டில் தரையிறங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பாலக்காடு மாவட்டம் பத்தான்சேரி பகுதியில் தரையிறங... மேலும் பார்க்க

சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கத் தடை!

காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் கூட்டம் குவியும் என்பதால் சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல், தொடர் விடுமுறை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் கூட்டம் குவிந்து வருகி... மேலும் பார்க்க

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகள், காளையர்கள்!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்ற... மேலும் பார்க்க

ராசிபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.ஆர்.சுந்தரம் காலமானார்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.அதிமுகவை சேர்ந்த பி.ஆர்.சுந்தரம் 1996 முதல் 2001 வரையும், 2001 முதல் 20... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 254 கன அடியாகக் குறைந்துள்ளது.வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.14 அடியில் இருந்து 113.84 அடியாக ... மேலும் பார்க்க