செய்திகள் :

BB 8 : `உன்னைய நம்பி கொடுத்திருக்கேன்' - பணப்பெட்டி டாஸ்க்கில் பவித்ராவிடம் ஜாக்குலின் சொன்னதென்ன?

post image
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 102 -வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.

இன்னும் மூன்று நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்தப் பணப்பெட்டி டாஸ்கில் இம்முறை பிக் பாஸ் பயங்கர ட்விஸ்ட் ஒன்றை வைத்திருக்கிறார். வழக்கமாக பணப்பெட்டி வைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் அதன் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும். ஆனால் இம்முறை பணப்பெட்டியை எடுக்க முதன்முறையாக டாஸ்க் வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே குறிப்பிட்ட தொலைவில் பணப்பெட்டி வைக்கப்படும்.

பவித்ரா- ஜாக்குலின்
பவித்ரா- ஜாக்குலின்

அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த பெட்டியை எடுத்து வருபவர்களுக்கு அந்த பணம் சொந்தமாகும். ஒரு வேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் உள்ளே வராவிட்டால், அந்த போட்டியாளர் அப்படியே வெளியேற்றப்படுவார். அந்த வகையில் முதலில் 50 ஆயிரத்திற்கான பணப்பெட்டி வைக்கப்பட்டது. அதை முத்துக்குமரன் வெற்றிகரமாக எடுத்துக்கொண்டு உள்ளே வந்தார். பின்னர் 2 லட்சத்திற்கான பணப்பெட்டியை ரயான் எடுக்க சென்றார். அவருக்கு 25 விநாடிகள் கொடுக்கப்பட்டது.

ஆனால் அவர் 17 விநாடிகளிலேயே அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டுவந்து 2 லட்சத்தை தன் வசப்படுத்தினார். இந்த டாஸ்கில் போகப் போகப் பணத்தின் மதிப்பு அதிகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று( ஜனவரி 15) பணப்பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பணப்பெட்டியை எடுத்து வர சென்ற ஜாக்குலின் குறிப்பிட நேரத்துக்குள் வீடு திரும்பவில்லை எனச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் இன்று ஒளிபரப்பாகலாம்.

பவித்ரா
பவித்ரா

இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் 2 லட்சத்திற்கான பணப்பெட்டியை எடுக்க பவித்ரா, ஜாக்குலின் இருவரும் முன்வருகின்றனர். அப்போது பவித்ரா, 'உள்ளவே வர முடியலைன்னா கூட பரவால ஜாக் நான் போறேன்' என்று சொன்ன உடன் ஜாக்குலின் சரி என்று பவித்ராவை பணப்பெட்டி எடுக்க அனுமதிக்கிறார். 'எல்லாருக்காவும் ஓடுற பவி. நீ எடுத்திட்டு வந்திருவனு நம்பி நான் உனக்கு கொடுத்திருக்கேன்' என்று ஜாக்குலின் சொல்கிறார். பவித்ரா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீடு திரும்பினாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Bigg Boss: `வீடு... 50 லட்சம் பணம்...' - பரிசுத்தொகைக்கு எவ்வளவு வரி? வருமான வரித்துறை சொல்வதென்ன?

சூப்பர் சிங்கர் சீசன் 9ல் வெற்றி பெற்ற அருணா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, ’சூப்பர் சிங்கரில் பரிசாகக் கிடைத்த வீட்டுக்கு இன்னும் குடிபோகவில்லை. குறிப்பிட்ட தொகையை வரியாகக் கட்டிய பிறகே வீட... மேலும் பார்க்க

Bigg Boss: கன்னட பிக்பாஸில் இருந்து விடை பெற்ற கிச்சா சுதீப் - அடுத்த தொகுப்பாளர் யார்?!

மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ்.தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்... மேலும் பார்க்க

Siragadikka aasai : ரோகிணிக்கு பேய் ஓட்ட நினைக்கும் மனோஜ்; வித்யாவை ஏமாற்றிய மீனா!

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்து போட்டத் திட்டத்தின்படி, மீனா வித்யாவின் வீட்டிற்கு சென்று அவரின் புகைப்படத்தை தனது மொபைலில் எடுக்கிறார். இந்த விஷயத்தில் வித்யாவின் நிலையைப் பார்க்கும்... மேலும் பார்க்க

Bigg Boss Rayan: ``செளந்தர்யாவுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் பற்றிய கமென்ட்ஸ்'' - ரயான் எக்ஸ்க்ளூசிவ்

பிக் பாஸ் சீசன் 8 முடிந்திருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் பீஸ்ட்டாக அதிரடியாக ஆடியவர் ரயான். தன்னுடைய ரெமோ ஸ்டைலால் பல பெண்களின் க்ரஷ் லிஸ்டிலும் தற்போது இடம் பிடித்திருக்கிறார். அவரை சந்தித்துப் ... மேலும் பார்க்க

Siragadikka aasai : ரோகிணியைப் பற்றிய உண்மை; வித்யா என்ன செய்வார்? - இந்த வாரம் என்ன நடக்கும்?

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து vs ரோகிணி எனக் கதைகளம் நகர்கிறது. இடையிடையே மனோஜின் காமெடி, விஜயாவின் ரகளை, வித்யா-முருகன் காதல், மீனாவின் தொழில் பிரச்னை என ஸ்வாரஸ்யம் கூடுகிறது.சமீபத்திய எபிசோடுகளில் ... மேலும் பார்க்க

Serial Update: திருமண தேதியை அறிவித்த சங்கீதா - அரவிந்த் சேஜு; தொடரிலிருந்து விலகிய சீரியல் ஜோடி

சன் மியூசிக் தொகுப்பாளராகப் பரிச்சயமானவர் விஜே சங்கீதா. `அழகு' தொடர் இவருக்கென ஓர் அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. நடிகையாகக் களம் இறங்கியவர் தொடர்ந்து பல தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கனா காணும... மேலும் பார்க்க