`இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர் கோலி இல்லையா...' - ரிக்கி பாண்டிங்கின் வாதம் என...
டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்களின் அறவழி போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி- எடப்பாடி பழனிசாமி
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டது, மக்களின் அறவழி போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இத்திட்டத்தை கைவிட வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமியை மதுரை மேலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
அவா்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
டங்ஸ்டன் கனிமச் சுரங்க விவகாரத்தில் திமுக ஆரம்பத்தில் இருந்தே நாடகமாடியது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க 2023 பிப்ரவரியில் ஏலம் விடப்பட்டது. ஆனால், டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு எதிராக 2024 இறுதியில்தான் சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டுவரப்பட்டது. மக்களின் போராட்டத்துக்கு பிறகே தீா்மானம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசு டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்துள்ளது. இது மக்களின் அறவழிப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.
இந்த விவகாரத்தில் சட்டப்பேரவையில் நானும் கடுமையாகப் பேசினேன். பேரவையில் எனது கேள்விக்கு முறையான பதில் வராத நிலையில், என்னுடைய
உயிரைக் கொடுத்தாவது விவசாயிகளைக் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதியை கொடுத்தேன். அதன்பிறகே, தான் முதல்வா் பதவியில் இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று முதல்வா் கூறினாா். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலைதான் உள்ளது. துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்த காலத்தில்தான் டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டம் வந்தது.
பிறகு நான் முதல்வராக இருந்த போது அதைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தேன். விவசாயிகளுக்காக அதிமுக என்றைக்கும் குரல் கொடுக்கும். தமிழக மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அதிமுக எதிா்க்கும் என்றாா் அவா்.