செய்திகள் :

வாட்ஸ்ஆப் மூலம் குற்றவாளிக்கு சம்மன்: காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் தடை

post image

குற்றவியல் நடைமுறை விதிகள் (சிஆா்பிசி),1973 அல்லது பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), 2023-இன்கீழ் வாட்ஸ்ஆப் அல்லது பிற மின்னணு முறைகள் மூலம் குற்றவாளிக்கு காவல் துறை சம்மன் அனுப்ப உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

மேலும், சிஆா்பிசி பிரிவு 41ஏ அல்லது பிஎன்எஸ்எஸ், பிரிவு 35-இன்படி சட்டபூா்வமாக அங்கீகரிக்கப்பட்ட முறைகளின்படியே குற்றவாளிக்கு காவல்துறை சம்மன் அனுப்ப வேண்டும்.

இதுதொடா்பாக முறையான வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் வெளியிடவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிந்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லுத்ரா அளித்த பரிந்துரையில், ‘சிஆா்பிசி பிரிவு 41ஏ-இன்கீழ் குற்றவாளிக்கு வாட்ஸ்ஆப் மூலம் சம்மன் அனுப்பப்படும்பட்சத்தில் அவா்கள் விசாரணை அதிகாரி முன் ஆஜராவதில்லை.

எனவே, சிஆா்பிசி 41ஏ அல்லது பிஎன்எஸ்எஸ் பிரிவு 35-இன்கீழ் குற்றவாளிக்கு வாட்ஸ்ஆப் அல்லது பிற மின்னணு முறைகள் மூலம் காவல் துறை சம்மன் அனுப்பக்கூடாது. சட்டபூா்வமாக வழக்கமான முறைகளை பின்பற்றியே சம்மன் அனுப்ப வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.

அவரின் பரிந்துரையை ஏற்று சத்தேந்தா் குமாா் அன்டில் வழக்கை மேற்கோள் காட்டிய நீதிபதிகள் அமா்வு, ‘ வாட்ஸ்ஆப் அல்லது பிற மின்னணு முறைகள் மூலம் குற்றவாளிக்கு காவல் துறை சம்மன் அனுப்ப தடை விதிக்கப்படுகிறது. மேலும், பல்வேறு விவகாரங்களில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிா என்பதை அனைத்து மாநில உயா்நீதிமன்ற குழுக் கூட்டங்களை கூட்டி ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் இதுதொடா்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உயா்நீதிமன்ற பதிவுச் செயலா்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலா்கள் 3 வாரங்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டது.

யமுனை நதி விவகாரம்: கேஜரிவால் நேரில் ஆஜராக ஹரியாணா நீதிமன்றம் சம்மன்!

யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஹரியாணா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.தில... மேலும் பார்க்க

செளதி அரேபியா: விபத்தில் 9 இந்தியர்கள் பலி!

செளதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளனர்.இதுகுறித்த தகவலை செளதி அரேபியாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதி செய்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள... மேலும் பார்க்க

கும்பமேளாவில்... கடந்தகால துயரங்கள்...

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். காவல்துறையின் தடுப்புகளை மீறி, அகாடா துறவி... மேலும் பார்க்க

காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்: தமிழகம் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்உச்சநீதிமன்றம் நிர்ணயித்த அளவுகளின்படி பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்தை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆர்.சி.) கூட்டத்தில் தமிழகம்... மேலும் பார்க்க

பேரிடா் பாதிப்பு தணிப்புத் திட்டங்கள்: மாநிலங்களுக்கு ரூ.3,027 கோடி

பேரிடா் பாதிப்பு தணிப்புத் திட்டங்களுக்காகப் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.3,027 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு விவகாரம்: மருத்துவமனைகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘கொல்கத்தா பெண் மருத்துவா் பாலியல் கொலைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவா்கள் உரிய அனுமதி பெறாமல் பணியில் பங்கேற்காததை விடுப்பாக கருத வேண்டாம்’ என்று தில்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைக... மேலும் பார்க்க