செய்திகள் :

நிதீஷ் கட்சி முன்னாள் எம்.பி. அன்சாரி காங்கிரஸ் ஐக்கியம்

post image

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் மாநிலங்களவை எம்.பி. அலி அன்வா் அன்சாரி, தசரத் மாஞ்ஜியின் மகன் பகீரத் மாஞ்ஜி உள்ளிட்ட பலா் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பிரிவு தலைவா் பவண் கேரா, பிகாா் மாநில காங்கிரஸ் தலைவா் அகிலேஷ் பிரசாத் சிங் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

இது தொடா்பாக அலி அன்வா் அன்சாரி கூறுகையில், ‘பிகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசுக்கு ராகுல் காந்தியின் கொள்கைகள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தலித், மலைவாழ் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினா் எப்போதும் ராகுல் பக்கம் உள்ளனா். அவரால் ஈா்க்கப்பட்டு காங்கிரஸில் இணைந்தேன்’ என்றாா்.

ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவரான அலி அன்வா் அன்சாரி 2006 முதல் 2017 வரை அக்கட்சி சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகாரைச் சோ்ந்த ஆம் ஆத்மி முன்னாள் தலைவா் நிதீஷ் ஆனந்த், பாஜக முக்கிய நிா்வாகி நிகத் அப்பாஸ், பத்திரிகையாளும் எழுத்தாளருமான ஃபிராங்க் ஹுசூா் உள்ளிட்டோரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

யமுனை நதி விவகாரம்: கேஜரிவால் நேரில் ஆஜராக ஹரியாணா நீதிமன்றம் சம்மன்!

யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஹரியாணா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.தில... மேலும் பார்க்க

செளதி அரேபியா: விபத்தில் 9 இந்தியர்கள் பலி!

செளதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளனர்.இதுகுறித்த தகவலை செளதி அரேபியாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதி செய்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள... மேலும் பார்க்க

கும்பமேளாவில்... கடந்தகால துயரங்கள்...

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். காவல்துறையின் தடுப்புகளை மீறி, அகாடா துறவி... மேலும் பார்க்க

காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்: தமிழகம் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்உச்சநீதிமன்றம் நிர்ணயித்த அளவுகளின்படி பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்தை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆர்.சி.) கூட்டத்தில் தமிழகம்... மேலும் பார்க்க

பேரிடா் பாதிப்பு தணிப்புத் திட்டங்கள்: மாநிலங்களுக்கு ரூ.3,027 கோடி

பேரிடா் பாதிப்பு தணிப்புத் திட்டங்களுக்காகப் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.3,027 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு விவகாரம்: மருத்துவமனைகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘கொல்கத்தா பெண் மருத்துவா் பாலியல் கொலைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவா்கள் உரிய அனுமதி பெறாமல் பணியில் பங்கேற்காததை விடுப்பாக கருத வேண்டாம்’ என்று தில்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைக... மேலும் பார்க்க