பொள்ளாச்சியில் பறக்கவிடப்பட்ட ராட்சச பலூன் பாலக்காட்டில் தரையிறக்கம்
பொள்ளாச்சி சர்வதேச பலூன் விழாவில் சில நாள்களுக்கு முன் பறக்கவிடப்பட்ட ராட்சச பலூன், கேரள மாநிலம் பாலக்காட்டில் தரையிறங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலக்காடு மாவட்டம் பத்தான்சேரி பகுதியில் தரையிறங்கிய பலூனில் இருந்து 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
போதிய எரிபொருள் இல்லாததால் பலூன் தரையிறங்கியதாக விசாரணையில் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்றது. இதில் பறக்கவிடப்பட்ட பலூன் ஒன்று கேரளத்தில் தரையிறங்கியிருக்கிறது.