இலங்கை தொடர்: ஆஸி.க்கு கூடுதல் ஒருநாள் போட்டி சேர்ப்பு!
இலங்கை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதலாக ஒரு ஒருநாள் போட்டி சேர்க்கப்பட்டுதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்ற அதே வேட்கையுடன் இலங்கை செல்லும் ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடருக்கு ஆஸ்திரேலிய அணி தகுதிபெற்ற நிலையில் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டும் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டி தொடரில் கூடுதலாக ஒரு போட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இரு அணிகளுக்கும் முதலில் ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஹம்பந்தோடாவில் நடத்தப்படவிருந்தது. தற்போது ஒரு போட்டி சேர்க்கப்பட்டு இரண்டுப் போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.
முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி முறையே ஜனவரி 26 மற்றும் பிப்ரவரி 6 ஆம் தேதியும், ஒருநாள் போட்டிகள் தொடரில் முதல் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதியும் மற்றும் 2-வது போட்டி 14 ஆம் தேதியும் நடத்தப்படவுள்ளது.