செய்திகள் :

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க குல்தீப் யாதவ் தீவிர பயிற்சி!

post image

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்காக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவுக்கு, கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது காயம் ஏற்பட்டது. அதன் பின், அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை.

இதையும் படிக்க: இலங்கை தொடர்: ஆஸி.க்கு கூடுதல் ஒருநாள் போட்டி சேர்ப்பு!

மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்த பிறகு, அந்த அணியுடன் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்காக குல்தீப் யாதவ் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

குல்தீப் யாதவின் உடல்தகுதி பரிசோதிக்கப்பட்டு, அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் நிலையில், இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் விளையாடுகிறது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

குல்தீப் யாதவ் முழு உடல்தகுதியை நிரூபிக்க தவறும் பட்சத்தில், அணியில் ரவி பிஷ்னோய் அல்லது வருண் சக்கரவர்த்தி இவர்கள் இருவரில் ஒருவர் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.

ஃபார்முக்குத் திரும்ப வேண்டுமா? உள்ளூர் போட்டிகளில் விளையாடுங்கள்: யுவராஜ் சிங்

வீரர்கள் ஃபார்முக்குத் திரும்ப உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இ... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு சிறந்த ஆண்டாக மாற வேண்டும்: ஸ்மிருதி மந்தனா

ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிறந்த ஆண்டாக மாற வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழு... மேலும் பார்க்க

இலங்கை தொடர்: ஆஸி.க்கு கூடுதல் ஒருநாள் போட்டி சேர்ப்பு!

இலங்கை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதலாக ஒரு ஒருநாள் போட்டி சேர்க்கப்பட்டுதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்ற அதே வேட்கையுடன் இலங்கை செல்லும் ஆஸ்திரேலிய அண... மேலும் பார்க்க

ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதை வென்றார் சதர்லேண்ட்!

ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் வென்றுள்ளார்.ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவை தவிர... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் விலகுவதாக அறிவித்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியாவுக்கான ப... மேலும் பார்க்க

அயர்லாந்துக்கு எதிராக 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வெற்றி!

அயர்லாந்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வெற்றி பெற்றது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையா... மேலும் பார்க்க