செய்திகள் :

ஜீவசமாதி அடைந்ததாகக் கூறப்படும் நபரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது!

post image

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடல் காவல் துறையினரால் தோண்டியெடுக்கப்பட்டது.

நெய்யத்திங்கராப் பகுதியின் கவுவிளக்கத்தில் கோபன் சுவாமி (வயது 69) என்பவரை ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் கூறி கடந்த வியாழக்கிழமை (ஜன.09) அன்று அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். மேலும், அவராகவே அன்று காலை 11 மணியளவில் அவரது சமாதி அமைந்துள்ள இடத்திற்கு நடந்து சென்று ஜீவசமாதி அடைந்துவிட்டதாகவும், அவரது உடலை பொதுமக்கள் யாரும் பார்க்கக்கூடாது எனவும் அவர் அறிவுருத்தியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில் கோபன் சுவாமியின் உடல் தோண்டியெத்து உடற்கூராய்வு செய்ய அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த பணியை அதிகாரிகள் கடந்த ஜன.13 அன்று துவங்கியப்போது அந்நபரது குடும்பத்தினர் மற்றும் இந்து மத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

இதனால், அந்த இடமே பரபரப்பானதினால் கோபன் சுவாமியின் உடலை தோண்டியெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், கோபன் சுவாமியின் மரணத்திலும் அவரது இறுதி சடங்கு நடைபெற்ற முறையிலும் சந்தேகம் இருப்பதாக அவரது அக்கம்பக்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்க:ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டது! அதானி குழுமத்துக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அமைப்பு!

இதனைத் தொடர்ந்து, அன்று முதல் அப்பகுதி முழுவதும் காவல் துறையினர் குவிக்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஜன.15) மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டது. அப்போது, அவரது உடல் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும், அவரை சுற்றியிலும் விபூதி உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் வைப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், அவரது உடல் திருவனந்தப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ஓ.வி. ஆல்பிரட் கூறியதாவது, கோபன் சுவாமியின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவரது உடல் கூராய்வு சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அந்த சோதனை முடிந்தபின்னர் மீண்டும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அவர் கூறினார்.

முன்னதாக, அவரது உடலை தோண்டுவதற்கு தடைவிதிக்கவேண்டும் என கோபன் சுவாமியின் குடும்பத்தினர் கேரள மாநில உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர், ஆனால் மர்ம மரணங்களின் மீது அதிகாரிகள் நடவடிக்கையெடுப்பது அவர்களது அதிகார உரிமை எனக்கூறி தடைசெய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

டிராகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

டிராகன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் டிராகன் திரைப்படம் உருவாகிவருகிறது. இந்தத் திரைப்படத்தில் மிஷ்கின், கௌதம் வா... மேலும் பார்க்க

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள்.. 'டிரெயின்’ படத்தின் ’சிறப்பு விடியோ’ வெளியீடு!

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜன.16) அவர் நடித்து வரும் இயக்குநர் மிஷ்கினின் “டிரெயின்” திரைப்படத்தின் சிறப்பு விடியோ வெளியிடப்பட்டுள்ளது.அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பி... மேலும் பார்க்க

3 வது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா! அமைச்சர் அன்பில் மகேஷ் துவங்கி வைத்தார்!

3 வது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா இன்று (ஜன.16) நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியுள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலை... மேலும் பார்க்க

நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் படுகாயம்!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டுகள் வெடித்து 2 மத்திய ரிசர்வ் காவல் படையினர் படுகாயமடைந்தனர். பிஜப்பூர் மாவட்டத்தின் பஸகூடா காவல் நிலையத்தின் எல்லக்குட்ப்பட்ட க... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் 8 வயது சிறுமி பலி!

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டத்தில் சிறுத்தை தாக்குதலில் 8 வயது சிறுமி பலியானார்.அம்மாவாட்டத்தின் கட்டார்னியாகாட் வனப்பகுதியின் அருகிலுள்ள தமோலின்புர்வா எனும் கிராமத்தைச் சேர்நத சாலினி (வயது... மேலும் பார்க்க

'ஆம்பள’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள்.. ஹிப்ஹாப் தமிழா பகிர்ந்த பதிவு!

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் தயாரித்து நடித்த ‘ஆம்பள’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஜன.15) 10 ஆண்டுகள் ஆகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு நகைச்சுவைக் கலந்த ஆக்‌ஷன் படமாக திரையரங்குகளில் வெளியான ஆம... மேலும் பார்க்க