செய்திகள் :

Hindenburg: 'Bye' - மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்.. 'மிரட்டல் காரணமா?'- என்ன சொல்கிறார் நிறுவனர்?

post image

2023-ம் ஆண்டு ஜனவரி மாதம், பல லட்சம் கோடி மதிப்புள்ள அதானியின் சாம்ராஜ்யத்தை ஆட்டம் காண வைத்தது ஒரு நிறுவனத்தின் அறிக்கை. அந்த நிறுவனம்தான் அமெரிக்காவை சேர்ந்த 'ஹிண்டன்பர்க் நிறுவனம்'.

என்னதான் அதானி குழுமம் அந்த அறிக்கையினால் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டிருந்தாலும், அதனால், ஏற்பட்ட அடி 'பலமான அடி' தான்.

அப்படிப்பட்ட நிறுவனம் இப்போது உலகிற்கு 'டாட்டா' சொல்கிறது.

அதானி - ஹிண்டன்பர்க்

ஹிண்டன்பர்க் நிறுவனம் பற்றி...

ஹிண்டன்பர்க் நிறுவனம் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் ஆன்டர்சன். அடிப்படையில் இது ஒரு ஷார்ட் செல்லிங் நிறுவனம் என்றாலும், பங்குச்சந்தை உலகில் நிறுவனங்கள் செய்யும் ஏமாற்று வேலைகள், மோசடிகளை விரிவான...விளக்கமான அறிக்கைகளாக வெளியிட்டு, அவற்றை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும்.

இந்த அறிக்கைகளில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாட்டு குழுமங்களின் மோசடிகள் வெளிவந்துள்ளன.

ஷார்ட் செல்லிங் என்றால் என்ன?

இது ஒரு வகையான டிரேடிங் ஆகும். தொடர்ந்து பங்குச்சந்தையில் டிரேடிங் செய்வதன் மூலம், எந்தப் பங்கு எப்போது ஏறும், இறங்கும் என்று ஓரளவுக்கு கணிக்க முடியும். அப்படி ஆய்வு செய்து கணித்தப் பங்கை, பிரோக்கர்கள் மூலம் கடனாக வாங்கப்படும். கடன் வாங்கியப் பங்கை ஒருவருக்கு அப்போது அந்தப் பங்கு விற்பனை ஆகும் விலையில் விற்கப்படும். அதன் விலை அப்போது ரூ.100 என்று வைத்துக்கொள்வோம்.

கணித்தப்படியே, ஒருகட்டத்தில் அந்தப் பங்கின் விலை குறையும். அப்போது அந்தப் பங்கின் விலை ரூ.80 என்று வைத்துக்கொள்வோம். ரூ.80-க்கு அந்தப் பங்கை வாங்கி, பிரோக்கர்களுக்கு மீண்டும் கடனை திருப்பி செலுத்திவிடுவார்கள். ஆக, நமக்கு ரூ.20 லாபம். இது தான் ஷார்ட் செல்லிங். இதைத் தான் ஹிண்டன்பர்க் நிறுவனம் செய்து வந்தது.

ஷார்ட் செல்லிங் என்றால் என்ன?

கடிதம்...

'யார் தொடர்பாக எப்போது என்ன அறிக்கை வரும்?' என்று பல லட்ச கோடிகளுக்கு அதிபதியான முதலாளிகள் பயப்படும் அளவுக்கு சிறப்பாகத் தான் செயல்பட்டு வந்தது ஹிண்டன்பர்க் அறிக்கை.

இந்த நிலையில், தற்போது திடீரென்று, இந்த நிறுவனத்தை கலைக்கப்போவதாக அறிவித்துள்ளார் ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆன்டர்சன். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள கடித்தத்தில்...

"கடந்த ஆண்டிலிருந்து குடும்பத்தினர், நண்பர்கள், குழு உறுப்பினர்களிடம் கூறிக்கொண்டிருத்தது மாதிரி, தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துள்ளேன். இதுவரை இருந்த ஐடியாக்கள் அனைத்தும் முடித்தப் பிறகு தான், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக செய்துகொண்டிருந்த பொன்சி நிறுவன வழக்கு அறிக்கையையும் முடித்துவிட்டு, அதிகாரிகளிடம் கொடுத்தாகிவிட்டது.

கனவு...

இந்தக் கடிதத்தை மகிழ்ச்சியாகவே எழுதுகிறேன். இதை உருவாக்குவது என்பது என்னுடைய கனவு.

தொடக்கத்தில், ஒரு நிறைவான பாதையை என்னால் கண்டுபிடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. இது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எனக்கு அப்போது ஆபத்துகள் மிக புதியதாக இருந்தன. அவை காந்தம் போல் என்னை இழுத்தன.

'என்னால் இது முடியுமா?' என்று இந்த நிறுவனத்தை தொடங்கும்போது சந்தேகப்பட்டேன். எனக்கு பாரம்பரிய நிதி பின்னணி இல்லை. என்னுடைய சொந்தக்காரர்கள் யாரும் இந்தத் துறையும் இல்லை. நான் அரசுப்பள்ளியில் தான் பயின்றேன். நான் திறமையான சேல்ஸ்மேன் கிடையாது. எந்த உடை அணிவது சரியாக இருக்கும் என்று தெரியாது. கோல்ப் விளையாட தெரியாது. 4 மணி நேரம் மட்டும் உறங்கி பணியாற்றும் சூப்பர்மேன் கிடையாது நான்.

பணம் இல்லை!

பணம் இல்லை!

நான் இந்த நிறுவனத்தை தொடங்கும்போது என்னிடம் பணமே இல்லை. முதலில் 3 வழக்கை எடுத்தபோது, சின்ன தொகை கிடைத்தது.

ஆரம்பத்தில் பிரயன் ஃவுட் என்னும் வழக்கறிஞர் மிகவும் உதவினார். பின்னர், படிப்படியாக 'குழு' என உயர்ந்தோம்.

மிரட்டல், உடல்நலக் குறைவு, தனிப்பட்ட பிரச்னை என எந்தக் காரணத்திற்காகவும் இப்போது இந்த நிறுவனத்தை கலைக்கவில்லை.

'ஒரு கட்டத்தில் வெற்றிகரமான தொழில் சுயநலமாக மாறும்' என்று ஒருவர் முன்னர் என்னிடம் கூறினார். ஆரம்பத்தில், நான் என்னை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது அதை நான் அடைந்துவிட்டேன்.

ஹிண்டன்பர்க் என்னுடைய வாழ்வின் ஒரு பகுதி...மையம் அல்ல" என்று கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்திலேயே, அவருடைய குழு உறுப்பினர்கள், தனி தனியாக இந்த மாதிரியான நிறுவனத்தை உருவாக்க உள்ளனர் என்று ஆன்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.

ஆக, 'ஹிண்டன்பர்க்குகள் உருவாகுமா...அல்லது இத்துடனே முடியுமா?' என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Elon Musk: `ட்விட்டரை வாங்கியதில் எலான் மஸ்க் மோசடி?' - வழக்கு தொடுத்துள்ள அமெரிக்க 'செபி' SEC!

'எலான் மஸ்க் அமெரிக்க பங்குச்சந்தையை ஏமாற்றியுள்ளார்' என்று அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற அமைப்பு. அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற கமிஷன் என்பது நம் நாட்டின்... மேலும் பார்க்க

90 Hours Job: `L&T நிறுவன தலைவர் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது'- L&T HR சோனிக்கா விளக்கம்

சமீபத்தில் எல் அண்ட் டி (L&T) நிறுவனத் தலைவர் SN சுப்பிரமணியன், ‘வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்’ என்று கூறியது பெரும் பேசு பொருளாக மாறியது. இதற்கு முன்னர் கடந்த மாதம் இன்போசிஸ் (In... மேலும் பார்க்க

90 Hours Job : 'இயந்திரத்துக்கே மெயின்டெனன்ஸ் நேரம் தேவை... மனிதர்களுக்கு வேண்டாமா?!'

'வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்' என்று எல் அண்ட் டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியிருந்த சர்ச்சை இன்னும் அடங்கவில்லை.இதற்கு பலர் தரப்பினர்களிடம் எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டிருக்கும் ... மேலும் பார்க்க

90 Hours Work: '40, 48, 90 மணி நேரம் வேலை எல்லாம் வேண்டாம்...10 மணி நேரம் போதும்' - ஆனந்த் மஹிந்திரா

'வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். உங்களை (தொழிலாளர்களை) ஞாயிற்றுகிழமைகளில் வேலைக்கு வர வைத்தாலும் மகிழ்ச்சியடைவேன். எவ்வளவு நேரம் தான் நீங்கள் உங்கள் மனைவியை பார்த்துக்கொண்டு இருப்பீர்க... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 6 : `ஊட்டச்சத்து பானம் டு லட்டு..!’ - பனங்கிழங்கும் விமலாம்பிகையும்

பனங்கிழங்கும் விமலாம்பிகையும்!'StartUp' சாகசம் 6தமிழ்நாட்டின் மாநில மரம் பனைதான். ஒரு பனையிலிருந்து ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெற... மேலும் பார்க்க