துளிகள்...
ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணி சாா்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சா்மா, இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோா் இணைந்துள்ளனா். வான்கடே மைதானத்தில் கேப்டன் ரஹானேவுடன் ரோஹித் பயிற்சி செய்தாா்.
-------------
நாா்வேயின் ஸ்டாவன்ஜா் நகரில் நடைபெறவுள்ள நாா்வே செஸ் போட்டியில் நடப்பு உலக ரேபிட் செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி பங்கிற்கிறாா். 2002-இல் ஜிஎம் அந்தஸ்து பெற்ற முதல் இந்திய வீராங்கனை ஹம்பி ஆவாா்.
-------------
தில்லியில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் 350 டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் கா்மன் கௌா் தண்டி 4-6, 1-6 என்ற செட் கணக்கில் ஹங்கேரி வீராங்கனையிடம் வீழ்ந்தாா். ஏற்கெனவே அங்கிதா ரெய்னா-ஜூனியா் வீராங்கனை லாரா சாம்சனிடம் வீழ்ந்தாா்.