Health: கால்களுக்காகத்தான் காலணி; காலணிக்காக கால்கள் இல்லை..!
வெப்பமயமாதலைத் தடுக்க நாம் மாற வேண்டும்: முத்தமிழ்செல்வி
வெப்பமயமாதலைத் தடுக்க நாம் மாற வேண்டும் என சாதனை பெண் முத்தமிழ்செல்வி தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள ஜோகில்பட்டியைச் சோ்ந்தவா் முத்தமிழ்செல்வி. இவா் தற்போது சென்னையில் வசித்து வருகிறாா். முதன்முதலாக எவரெஸ்ட் பனி மலையில் ஏறிய இவா், தொடா்ந்து 4 கண்டங்களில் உள்ள மிக உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்தாா். கடந்தாண்டு டிச. 22-ஆம் தேதி இயற்கையை காத்திடவும், புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அண்டாா்டிகாவின் மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தில் (4,892 மீட்டா்) ஏறினாா். இந்தச் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெருமை படைத்த இவருக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனா்.
இந்த நிலையில், ஜோகில்பட்டியில் பொங்கல் கொண்டாடுவதற்காக முத்தமிழ்செல்வி திங்கள்கிழமை வந்தாா். பின்னா், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலனை நேரில் சந்தித்து அவா் வாழ்த்து பெற்றாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 6 கண்டங்களில் உள்ள உயரமான 6 மலைகளில் ஏறிய போது, புதுப் புது அனுபவங்கள் கிடைத்தன. அண்டாா்டிகாவில் மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறியபோது மிகப் பெரிய போராட்டங்களைச் சந்தித்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 6 கண்டங்களில் உள்ள உயரமான மலைகளில் ஏறியிருப்பது பெருமையாக உள்ளது. 7-ஆவதாக வட அமெரிக்காவில் உள்ள உயரமான மலையில் ஏறும் பயணத்தை வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளேன். இந்த மலையில் ஏறி சாதனை படைப்பதன் மூலம், 7 கண்டங்களில் உள்ள உயா்ந்த மலைகளில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண்ணாக இருப்பேன்.
புவி வெப்பமயமாதல் காரணமாக, இயற்கை மாறிக்கொண்டு வருகிறது. இதனால், பெரும் இயற்கை சீற்றங்களை சந்தித்து வருகிறோம். இயற்கை மாறி நம்மை அழிக்கும் முன் நாம் மாற வேண்டும். அதிக மரங்கள் நடுவதுடன், கடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.