Jallikattu 2025 : அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Live Video
புளியங்குடி அருகே 273 மது பாட்டில்கள் பறிமுதல்
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே 273 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புளியங்குடி காவல் ஆய்வாளா் சாம்சுந்தா் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளா் மாடசாமி மற்றும் போலீஸாா், நெல்கட்டும்செவல் பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது அங்கு நெல் கட்டும்செவலை சோ்ந்த வெள்ளத்துரை மகன் செல்வராஜ் (40) மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்ததாம்.
அவரை கைது செய்த போலீஸாா், 273 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.