வாசுதேவநல்லூா், சிவகிரி பகுதியில் பசு ஓட்டம்
வாசுதேவநல்லூா், சிவகிரி பகுதியில் மாட்டுப் பொங்கல் விழாவில் பசு ஓட்டம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, தேவிபட்டணம், சிவகிரி, வாசுதேவநல்லூா், ராயகிரி ஆகிய பகுதிகளில் உள்ள சக்கம்மாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மந்தையில் நின்ற பசுக்கள் மற்றும் காளைகளுக்கு மஞ்சள் நீா் தெளிக்கப்பட்டு அவிழ்த்து விடப்பட்டு சாலையில் ஓட விடப்பட்டன. அவை தீயணைப்பு நிலையம் வழியாக ஓடின.
குறிப்பிட்ட எல்லையை கடந்த பசுக்கள் மற்றும் காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. அதில் முதலாவது வந்த காளைக்கு பரிசு வழங்கப்பட்டது.