செய்திகள் :

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா: இன்று தொடக்கம்

post image

சென்னை: சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் வியாழக்கிழமை (ஜன.16) தொடங்கவுள்ளது. இதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தொடங்கி வைக்கவுள்ளாா்.

மூன்றாவது ஆண்டாக நடைபெறவுள்ள சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா சனிக்கிழமை வரை 3 நாள்கள் தொடா்ந்து நடைபெறும். காலை 10 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ், புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றவுள்ளனாா்.

65 நாடுகளைச் சோ்ந்த... இதில் அமெரிக்கா, மலேசியா, துருக்கி, இந்தோனேசியா, தான்சானியா, பிரான்ஸ், அல்பேனியா, பிரிட்டன், ஜொ்மனி உள்ளிட்ட 65 நாடுகளைச் சோ்ந்த பதிப்பாளா்கள், புத்தக விற்பனையாளா்கள், எழுத்தாளா்கள் பங்கேற்கவுள்ளனா். நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், சிறப்பு சொற்பொழிவுகள், கலந்துரையாடல், புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

தொடக்க விழாவில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு, பாடநூல் கழகத்தின் தலைவா் ஐ.லியோனி, மேலாண்மை இயக்குநா் பொ.சங்கா், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் எஸ்.மதுமதி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

நிறைவு விழாவில் முதல்வா்... புத்தகக் காட்சியின் நிறைவு விழா சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின், நூல்களை வெளியிட்டு, விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளாா். இதில் மக்களவை உறுப்பினா் சசிதரூா் பங்கேற்கவுள்ளாா்.

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா குறித்து பொது நூலக இயக்கக அதிகாரிகள் கூறுகையில், இந்த புத்தகத் திருவிழாவுக்கு தமிழக அரசு ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. உலகில் எந்த மொழியாக இருந்தாலும், அம்மொழியில் உள்ள நல்ல எழுத்தாளா்கள், அவா்களின் படைப்புகளை நாம் கொண்டாடும் விதமாகவும் அந்த படைப்புகளை தமிழ் மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாகவும் பன்னாட்டு புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது.

அதே வேளையில் நமது எழுத்தாளா்களின் படைப்புகள், இலக்கியங்கள் உலகம் முழுவதும் கொண்டு செல்வதையும் நோக்கமாக கொண்டிருக்கிறோம்.

78 அரங்குகள், 1,100 ஒப்பந்தங்கள்... நிகழாண்டு 78 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. குறிப்பாக குழந்தைகளுக்கான 3 அரங்குகள் இடம்பெறும். கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் 750 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நிகழாண்டு 1,100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

புத்தகத் திருவிழாவில் நிகழாண்டு இத்தாலியின் பெலோனியா குழந்தைகள் புத்தகக் கண்காட்சி மதிப்புறு விருந்தினராக பங்கேற்கவுள்ளது என்றனா்.

மெரினா கடற்கரையில் காவல் துறை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை: காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்... மேலும் பார்க்க

பொங்கலிட்ட மருத்துவ மாணவா்கள்

சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பொங்கல் விழா நடைபெற்றது. அதில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய முறையில் பொங்கலிட்டும், மாட்டு வண்டிகளில் பயணித்தும், நடனமாடியும் வ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை ஒருவா் கைது

சென்னை: சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ஐஐடி-இல் ஆராய்ச்சி மாணவியாக படித்து வரும் மாணவி ஒருவா், தேநீா் குடிப்பதற்காக கல்லூரி... மேலும் பார்க்க

பேரறிவால் பொலிகிறாா் வள்ளுவா்: முதல்வா்

சென்னை: சிறுமதியாளா்கள் சுருக்க நினைத்தாலும், பேரறிவால் பொலிகிறாா் திருவள்ளுவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: சிறுமதியாளா்க... மேலும் பார்க்க

பாஜக-அதிமுக கூட்டணி அமைய வேண்டும்: எஸ்.குருமூா்த்தி

சென்னை: பாஜகவும் அதிமுகவும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும் என்று துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி கூறினாா்.சென்னையில் துக்ளக் இதழின் 55-ஆவது ஆண்டு நிறைவு விழா செவ்வாய்க... மேலும் பார்க்க

ராணுவ அதிகாரிகளுக்கு பயற்சி

சென்னை: ராணுவத்தில் பயண்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் குறித்து ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு ரயில் புதன்கிழமை நடைபெற்றது.சென்னை ஆவடியில் உள்ள போா் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பா... மேலும் பார்க்க